தேசிய கண் கொடை நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய கண் கொடை நாள்
அதிகாரப்பூர்வ பெயர்இந்தியதேச கண்தான தினம்
கொண்டாட்டங்கள்ஊர்வலங்களும் கொடைகளும்
நாள்செப்டம்பர் 8
நிகழ்வுஆண்டுதோறும்

இந்தியாவின் தேசிய கண் கொடை நாள் (National Eye Donation Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகத்து 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் கண் கொடை சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்கு முகாம்கள் நடத்தபடுவதோடு, பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.[1][2]

உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்.[3] இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.

சிறப்புத் தகவல்கள்:[4]

  • ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.
  • கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே[5] ஆகும்.
  • கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம்.
  • கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களைமூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.
  • உலகிலேயே இலங்கையே கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.
  • இந்திய தேசிய கண்தான தினம் ஆகத்து 25 முதல்- செப்டம்பர் 8 முடிய இருவார கொண்டாட்டம்.
  • 2011ல் செப்டம்பர் 8ஆம் திகதி,அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது துணைவியார் குர்சரண் சிங் கவுர் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இட்டனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]