தேசிய உலர் தாவரகம், பாக்கித்தான்
தேசிய உலர்தாவரகம் | |
---|---|
வகை | தேசிய உலர்தாவரகம் |
அமைவிடம் | இஸ்லாமபாத்,பாகிஸ்தான் |
திறப்பு | 1975 |
சேகரிப்புகள் | ~100,000 |
பாக்கித்தானின் தேசிய உலர்தாவரகம் என்பது பாகிஸ்தான் வேளாண் ஆராய்ச்சி மையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு உலர்தாவரகமாகும். இது பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமபாத்தில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
[தொகு]1912 மற்றும் 1959 ஆம் ஆண்டின் இடையில் டாக்டர் ரால்ப் ரண்டிலஸ் ஸ்டீவர் என்பவரால் விரிவான அளவில் சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, 1974 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தின் தேசிய வேளாண் மையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர், தேசிய உலர்தாவரகத்துக்கு கையளிக்கப்பட்டது.[2] தற்போது 100,000 க்கும் மேற்பட்ட மாதிரிகள் கொண்டுள்ள இதன் பெரும்பாலான மாதிரிகள் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவையாகும். 1970 ஆம் ஆண்டில், நசீர் மற்றும் எஸ்.ஐ.அலி (கராச்சி பல்கலைக்கழகம்) ஆகியோரால் பாக்கித்தானின் தாவரங்களை வகைப்படுத்தும் பணி தொடங்கியது. இது 2021 ஆம் ஆண்டில் நிறைவடைந்துள்ளது. இதனடிப்படையில் 6000 க்கும் மேற்பட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில், தாவரங்கள் மாக்னோலியோபைட்டுகளாக (டைக் காட்டிலிடைன்ஸ் மற்றும் மோனோகாட்டிலடன்ஸ்இ ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் டேரிடோபைட்டுகள் (பெர்ண்ஸ்) ஆகியவையாக பிரிக்கப்படுகின்றன. இவை குடும்பம் இ பேரினம் மற்றும் சிற்றின மரபுவாரியாக வைக்கப்படுகின்றன. இனங்கள் அகர வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
மேலும் காண்க
[தொகு]- List of botanical gardens in Pakistan
- List of herbaria
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tribsch, Andreas; Frahm, Jan-Peter; Eggers, Jens (February 2002). Schmid, Rudolf. ed. "Lexikon deutschsprachiger Bryologen". Taxon 51 (1): 221. doi:10.2307/1555001. http://dx.doi.org/10.2307/1555001.
- ↑ "தேசிய ஹெர்பேரியம், பாகிஸ்தான்".