தேசிய அறிவியல் நூலகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய அறிவியல் நூலகம்
தொடக்கம்சூன் 1963
அமைவிடம்சட்சாங் விகார் மார்க்கம் புது தில்லி
இணையதளம்nsl.niscair.res.in

தேசிய அறிவியல் நூலகம் (National Science Library) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான அறிவியல் நூலகம், ஆவணக் காப்பகம் மற்றும் களஞ்சியமாகும்.[1] இது சூன் 1963-ல், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் அனைத்து அறிவியல் ஆய்வு இதழ்களையும், வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தேசத்தின் அறிவியல் பணிகளின் அறிக்கைகளைப் பெறுவதற்கும் தக்கவைப்பதற்காக நிறுவப்பட்டது.[2]

ஆரம்பத்தில் இது தேசிய இயற்பியல் ஆய்வக கட்டிடத்தில் நிறுவப்பட்டது, பின்னர் தற்காலிகமாக ஜவகர்லால் ந்நெய் பல்கலைக்கழக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

கட்டிடம்[தொகு]

1983ஆம் ஆண்டில், சத்சங் பீகார் மார்க், புது தில்லியில் நூலகம் மற்றும் பிற துணை நோக்கங்களுக்காக, தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தரமாக நான்கு மாடிகள் கொண்ட மத்திய குளிரூட்டப்பட்ட கட்டிடம் கட்டப்பட்டது தேசிய அறிவியல் நூலகத்திற்காகக் கட்டப்பட்டது.[2]

குறிக்கோள்[தொகு]

முக்கிய குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் நாடு முழுவதும் அறிவியல் தகவல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான பல்வேறு வகையான முறையான மற்றும் முறைசாரா அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவது, அத்துடன் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து பயனர்களுக்கும் பதிவுசெய்யப்பட்ட அறிவை அடையாளம் கண்டு, பெறுதல், ஒழுங்கமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அணுகலை வழங்குதல். நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டது.[3]

சேகரிப்பு[தொகு]

ஒரு பொருள் நூல்கள், பத்திரிக்கைகளின் கட்டுப்பட்ட தொகுதிகள், அறிக்கைகள், ஆய்வறிக்கைகள்/ஆய்வுகள், தரநிலைகள் மற்றும் காப்புரிமைகள் போன்ற 2,51,000 அச்சிடப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப ஆவணங்களைத் தேசிய அறிவியல் நூலகம் காப்பகப்படுத்தியுள்ளது. இந்த பெரிய சேகரிப்புகள் ஒரு தகுதியான ஆராய்ச்சி மேம்பாட்டுக் குறிப்புக்கான ஆதாரங்களை உருவாக்குகின்றன.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]