தெஹ்ரான் தாக்குதல்கள், ஜூன் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெஹ்ரான் தாக்குதல், ஜூன் 2017
தாக்குதல் நடந்த இடம்
இடம்தெஹ்ரான், ஈரான்
நாள்சூன் 7, 2017 (2017-06-07)
10:50– (ஈரானிய நேரம்)
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல், பணையக் கைதிகள்
இறப்பு(கள்)19 (12 பொதுமக்கள், 7 தாக்குதல்தாரிகள்)
காயமடைந்தோர்38+ [1]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இசுலாமிய அரசு [2]

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திலும் ஆயத்துல்லாஹ் கொமேனியின் நினைவிடத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரு தாக்குதல்களும் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகும். [3] இவ்விரு தாக்குதல்களிலும் 19 பேர் கொல்லப்பட்டனர். மாண்டவர்களில் தாக்குதல் நடத்திய ஏழு பயங்கரவாதிகளும் அடங்குவர்.

தாக்குதல்[தொகு]

ஜூன் 7, 2017 அன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். ஆயத்துல்லாஹ் கொமேனியின் நினைவிடத்தில் அயுதம் தாங்கிய மூன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். தாக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர் தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து மரணமடைந்தார். நாடாளுமன்றத் தாக்குதலில் பயங்கரவாதிகள் சிலரைப் பணையக் கைதிகளாக்கினர்.[4] இசுலாமிய அரசு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]