தெறோச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரியப் போரின்போது அமெரிக்க 24 வது காலாட்படைப் பிரிவின் 90வது கள சேணேவி தாக்குதலணி(bat.) M114 155 மிமீ தெறோச்சியால் சுடுகிறார்கள்

ஒரு தெறோச்சி[சான்று தேவை] (Howitzer) பொதுவாக ஒரு சேணேவி சுடுகலனிற்கும் (அமெரிக்காவிற்கு வெளியே தெறுவேயம் என்றும் அழைக்கப்படுகிறது) - இது சிறிய, அதிக-திசைவேக எறிகணைகளை தட்டையான எறிபாதைகளில் சுடுவது - மற்றும் ஒரு கணையெக்கிக்கும் - இது ஏற்றம் மற்றும் இறக்க உயர் கோணங்களில் சுடுவது - இடையில் நிற்கும் ஒரு பெரிய அளவிலான ஆயுதம். தெறோச்சிகள், மற்ற சேணேவி ஏந்தனங்களைப் போலவே, பொதுவாக சேணேவி தொகுதி எனப்படும் குழுவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

சொற்பிறப்பியல்[தொகு]

ஆங்கிலச் சொல்லான howitzer என்பது செக் சொல் houfnice, [1] [2] [3] houf இருந்து, "கூட்டம்", [4] [5] மற்றும் houf என்ற மத்திய உயர் ஜெர்மன் சொல் Hūfe அல்லது Houfe(நவீன ஜெர்மன் Haufen), அதாவது "குவியல்" என்று பொருள்படும்.

இதற்கான தமிழ்ச் சொல்லான தெறோச்சி[சான்று தேவை] என்பது தமிழில் மூன்று சொற்களில் - தெறு+ ஓச்சு + ஏதி - இருந்து உருவான ஒரு கூட்டுச் சொல்லாகும்.தெறு- சுடுதல், அழித்தல், கொல்லுதல்,வருத்துதல், நெரித்தல், கொட்டுதல், துன்பம்; ஓச்சு- எறிதல், செலுத்துதல், பாச்சுதல், உயர்த்துதல் , தூண்டி விடுதல்; - விகுதி. அதாவது கொன்றழிக்கக்கூடிய எறிகணையினை சுட்டு மிகக் கூடிய தொலைவிற்கும் அதிக அளவிலான உயரத்திற்கும் செலுத்துத்தும் ஓர் படைக்கலம் என்று பொருள் படும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு 12-பவுண்டர் (5 கிலோ) அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள லாரமி கோட்டையில் தேசிய பூங்கா சேவையால் காண்பிக்கப்படும் மலை தெறோச்சி

வகைகள்[தொகு]

  • சங்கிலி அல்லது சக்கர தானுந்து ஊர்தியில் தானே பிலிறுந்திய தெறோச்சி மூட்டப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், மேலோட்டமாக ஒரு தகரியை ஒத்திருக்கதக்கதாக இது ஒருவித கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கவசமானது கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அல்லாமல், சிதறு துண்டுகள் மற்றும் சிறிய வேட்டெஃக வேட்டிலிருந்து குழுவினரைப் பாதுகாப்பதற்காகவே முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஒரு பொதி தெறோச்சி என்பது ஒப்பீட்டளவில் இலகு தெறோச்சி ஆகும், இது பல துண்டுகளாக எளிதில் பிரிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் கோவேறு கழுதை அல்லது பொதிகுதிரையால் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு சிறியவை ஆகும்.
  • ஒரு பொதி தெறோச்சி என்பது மலைப்பாங்கான நிலப்பரப்பில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒப்பீட்டளவில் இலகு தெறோச்சி  ஆகும். பெரும்பாலானவை, ஆனால் அனைத்துமே அல்ல, மலை தெறோச்சிகளும் பொதி தெறோச்சிகள்தான்.
  • ஒரு முற்றுகை தெறோச்சி(Siege howitzer) என்பது ஒரு தெறோச்சி ஆகும், இது ஒருவிதமான மூட்டப்பட்ட(mounted) நிலையான மேடையில் இருந்து சுடத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஒரு களத் தெறோச்சி என்பது ஒரு தெறோச்சி ஆகும், இது தொடர் நடவடிக்கையின் போது ஒரு களப்படையுடன் செல்ல போதுமான நடமாடும் தெறோச்சியாகும். இது ஒருவித சக்கர காவுவண்டியுடனே மாறாமல் வழங்கப்படுகிறது.

காட்சிக்கூடம்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Online Etymology Dictionary". etymonline.com.
  2. The Concise Oxford English Dictionary, 4th edition reprinted, 1956: "Howitzer".
  3. Paul, Hermann. 1960. Deutsches Wörterbuch. "Haubitze".
  4. Stephen Turnbull: The Hussite Wars, 1419–36. P.46
  5. "houfnice" in Václav Machek, Etymologický slovník jazyka českého, second edition, Academia, 1968.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெறோச்சி&oldid=3421212" இலிருந்து மீள்விக்கப்பட்டது