தெரிதல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெரிதல்
தெரிதல்
இதழாசிரியர் அ. யேசுராசா
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி இருமாதம் ஒருமுறை
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் மார்கழி, 2003
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம்
நாடு இலங்கை, யாழ்ப்பாணம்
வலைப்பக்கம் []

தெரிதல் இளையவர்களுக்கு காத்திரமான இலக்கியத் தகவல்களை அறிமுகப்படுத்தி வந்த ஒரு சிற்றிதழ் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. 2003 ஆம் ஆண்டு மார்கழியில் தொடங்கப்பட்ட தெரிதல் இருமாத இதழாக 2006 ஆவணி வரை வெளிவந்தது. எல்லாமாக 15 இதழ்கள் வெளிவந்தன. முதல் இதழில் 1500 பிரதிகளும் இரண்டாவது இதழில் 2000 பிரதிகளும் அச்சிடப்பட்டன. ஏ- 4 அளவில், எட்டுப்பக்கங்களில் வெளியான இதன் விலை 5 ரூபா. இவ்விதழில் கலை இலக்கிய உலகு சார்ந்த விடயங்கள் சுருங்கிய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இளைஞரைப் பாதிக்கும் ஜனரஞ்சகப் புத்தகங்களினதும், திரைப்படங்களினதும் போலித்தன்மைகள் சுட்டிக்காட்டப் பட்டன. தமிழிலும் பிறமொழிகளிலும் வந்த நல்ல திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கவிதைகள், சிறிய சிறுகதைகள், நூல் அறிமுகம், விமர்சனம் போன்ற அம்சங்களைத் தாங்கிவந்த தெரிதல் அப்பால்தமிழ் இணையத்தளத்திலும் வெளியிடப்பபட்டது.

சன்மானம்[தொகு]

தெரிதல் இதழின் நான்காவது வெளியீட்டிலிருந்து ஒரு பக்கத்துக்கு 100 ரூபா, அரைப் பக்கத்துக்கு 50 ரூபா என்ற கணக்கில் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. சன்மானத்துடன் இருஇதழ்களும் இனாமாகக் கொடுக்கப்பட்டன.


வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரிதல்_(இதழ்)&oldid=1500924" இருந்து மீள்விக்கப்பட்டது