தென்னை மரக் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னை மரக் குன்று

தென்னை மரக் குன்று (Coconut Tree Hill) இலங்கையின் மிரிசா நகரத்தில் இந்தியப் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு சிவப்பு களிமண் குன்றாகும். இது இலங்கையில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், தென்னந்தோப்பு கொண்ட ஒரு கடற்கரையோர மேட்டு நிலப்பகுதியில் அமைந்துள்ளது. தென்னை மர மலை, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருந்தாலும், இலங்கையில் அதிகம் படவரி செய்யப்பட்ட இடங்களில் ஒன்றாகும். [1] 1881 ஆம் ஆண்டில், எர்னசுட்டு ஏக்கல், மிரிசாவை சூரிய மறைவின் போது "சிவப்பு பாறைகளாக" சித்தரித்தார் , சிலோன் வருகை என்ற புத்தகத்தில் "அவை நிலக்கரி எரிவது போல் தெரிகிறது. என கூறப்பட்டுள்ளது." [2] சுற்றுலாப் பயணிகளுக்கு சூரிய உதயத்தைக் காணும் இடமாகவும் இந்த குன்று பரிந்துரைக்கப்படுகிறது. [3] வெலிகமை விரிகுடாவின் குறுக்கே வெலிகமைவை ஒட்டிய மிரிசா கடற்கரையில் இந்த குன்று அமைந்துள்ளது. [4] மிரிசா கடற்கரை உலகின் "ரகசிய கடற்கரைகளில்" ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. [5]

2021 முரண்பாடு[தொகு]

2021 ஆம் ஆண்டில், குன்று அமைந்துள்ள தனியார் நிலத்தின் மீது மலையின் குறுக்கே வேலி அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன் அனுமதியின்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதால், வேலியை இடித்துத் தள்ளுமாறு நில உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டது. சமூகவலைத்தளங்களில் ஏற்பட்ட சீற்றத்தின் பின்னர், அப்போதைய பிரதமர் மகிந்த ராசபக்ச நிலைமையை அறிந்து கொண்டார். மலையின் நிலப்பரப்பு சுமார் 400 பேர்ச்சசு நீளம் ஆகும். இதில் 320 பேர்ச்சு நீளம் வேலியை அமைத்த இலங்கையருக்கும் சொந்தமானது. பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக குன்று மீண்டும் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை_மரக்_குன்று&oldid=3624376" இலிருந்து மீள்விக்கப்பட்டது