தென்னிந்தியக் கலாச்சாரம்
தென்னிந்தியக் கலாச்சாரம் அல்லது திராவிடக் கலாச்சாரம் அல்லது திராவிடப் பண்பாடு என்பது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய தென்னிந்தியா மாநிலங்கள் மற்றும் இலங்கை நாட்டில் தென்னிந்திய மற்றும் தமிழர்கள் வாழும் வட-கிழக்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைக் குறிப்பதாகும். தென்னிந்தியக் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகவும், வேறுபட்ட வடிவத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. தாய்மை மற்றும் உடலின் அழகைக் கொண்டாடுவதன் மூலமாக எல்லையற்ற அண்டத்தினைக் கொண்டாடுவதாக இக்கலாச்சாரம் இருக்கின்றது.[1][2][3][4][5] இக்கலாச்சாரம் அதனுடைய நடனம், உடை, சிற்பம் ஊடான எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபணமாகின்றது[1][2][3][4][5]
பாரம்பரிய உடை
[தொகு]தென்னிந்திய பெண்கள் பாரம்பரியமாக புடவையையும் (சேலை), ஆண்கள் சாரனும் (சாரம்) அணிவர். இது வெள்ளை வேட்டியாகவோ அல்லது வண்ணமான தனித்துவமான பற்றிக்கு அலங்கரிப்பிலான லுங்கியாகவோ இருக்கும்.
உணவு
[தொகு]அரிசி முதன்மையான உணவு. கேரளா, கர்நாடகாவின் கடற்கறைப் பகுதிகள், மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் போன்ற இடங்களில் தேங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
இசை
[தொகு]நடனம்
[தொகு]பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கதக்களி, குச்சுப்பிடி போன்றவை தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடனங்கள்.
கட்டக்கலை
[தொகு]தஞ்சை பெரியக் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், பத்மநாபபுரம் அரண்மனை போன்றவை தென்னிந்தியர்களின் கட்டடக்கலைக்கு உதாரணங்கள்.
கல்வி
[தொகு]தமிழின் பழம்பெரும் காப்பியமான தொல்காப்பியம், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி, மற்றும் உலக பொதுமறையாம் திருக்குறள் ஆகியவை தென்னிந்தியர்களின் கல்விப்புலமைக்கு உதாரணங்கள்.
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 Beck, Brenda. 1976. “The Symbolic Merger of Body, Space, and Cosmos in Hindu Tamil Nadu." Contributions to Indian Sociology 10(2): 213-43.
- ↑ 2.0 2.1 Bharata (1967). The Natyashastra [Dramaturgy], 2 vols., 2nd. ed. Trans. by Manomohan Ghosh. Calcutta: Manisha Granthalaya.
- ↑ 3.0 3.1 Dehejia, Vidya, Richard H. Davis, R. Nagaswamy, Karen Pechilis Prentiss (2002) The Sensuous and the Sacred: Chola Bronzes from South India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-295-98284-5
- ↑ 4.0 4.1 Kallarasa Virachita Janavasya Ed: G.G. Manjunathan. Kannada Adhyayana Samsthe, University of Mysore, Mysore 1974
- ↑ 5.0 5.1 Wadley, Susan, ed. 1980. The Powers of Tamil Women. Syracuse: Syracuse U. Press.