தெங்கமம் பாலகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெங்கமம் பாலகிருட்டிணன் (Thengamam Balakrishnan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பாலகிருட்டிணன் 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் சனயுகம் மலையாள செய்தித்தாளின் ஆசிரியராவார். கேரளா மாநிலத்தின் அடூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1970 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பாலகிருட்டிணன் 2013 ஆம் ஆண்டு சூலை 3 ஆம் தேதி தன்னுடைய 86 வது வயதில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]