தெகாபோ ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெகாபோ ஏரியானது நியூசீலாந்தின் மக்கென்சீ மாவட்டத்தில் உள்ள அழகிய ஏரியாகும். ஏரிக்கரையில் அமைந்திருக்கும் நல்ல சமாரியன் தேவாலயமும் கோடையில் வளரும் லூபின் மலர்களும் தனித்துவமான அழகை உடையவை.

நியூசிலாந்தின் மிக அழகிய களை என வர்ணிக்கப்படும் ரசல் லூபின்ஸ் (Russell Lupins) 1930 களில் மக்கென்சீ மாவட்டக் (Mackenzie District) குடியேறிகளால் நியூசிலாந்துக்கு அறிமுகப்படுத்தப் பட்டு, இன்று தென்தீவெங்கணும் பரந்து வளரும் செடியினமாக‌ உருவெடுத்துள்ளது.

கோடை காலத்தில் பூத்துக் குலுங்கும் இக்களையின் வனப்பு, வருடாந்தம் எண்ணிலடங்காச் சுற்றுலாப் பயணிகளை தெகாபோ ஏரிக்கரைக்கு  ஈர்க்கின்றது. எனினும், தாயகத்து இயற்கைச் சம‌நிலைக்குக் குந்தகம் விளைவிக்கும் இச்செடியின் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, பேணுகைத் திணைக்களம் (Department of Conservation) மேற்கொண்டு வருகின்றது.

1950களில் தீவினை மேலும் எழிலூட்டுங்கால்,  மக்கென்சீ மாவட்டச் சாலையோரங்களிலும், தரிசுநிலங்களிலும் லூபின் விதைகளைத் தூவிய கொன்னீ ஸ்கொட் என்ற பெண் இன்றும் லூபின் பெண்மணி என நினைவுகூரப் படுகிறார். (Connie Scott - The Lupin Lady)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகாபோ_ஏரி&oldid=2527373" இருந்து மீள்விக்கப்பட்டது