தூய யோவான் மகளிர் மேல் நிலைப்பள்ளி, நாசரேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவில் மூன்றாவதாக தொடங்கப்பெற்ற பெண்கள் பள்ளியாகும். இது தூத்துக்குடி மாவட்டம், நாசரெத்து நகரில் அமைந்துள்ளது.

இது 1820 ஆம் ஆண்டு அருள்திரு ஹோக் என்பவரால் தொடங்கப் பெற்றது. 1876ஆம் ஆண்டு கேனன் மார்காசிஸ் இப்பள்ளியின் மேலாளராக செயல்பட்டார். அவர் இப்பள்ளி வளாகத்தில் 1877ஆம் ஆண்டு பெண்களுக்காக ஆசிரியப் பயற்சி நிறுவனத்தை நிறுவினார். மேலும் ஒரு மழலையர் பள்ளியையும் தொடங்கினார். 1886 ஆம் ஆண்டு இப்பள்ளியை உயர்நிலையைப் பள்ளியாக தரம் உயர்த்தினார். 1888ஆம் ஆண்டு முழுமைபெற்ற உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு, அவ்வாண்டு நடைபெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வின் வெற்றிபெற்று சென்னை மாகாணத்திலிருந்து வெளிவந்த முதல் தொகுதி மாணவியர்கள் என்ற சிறப்பையும் பெற்றனர். இப்பள்ளியின் தரம் 1890ஆம் ஆண்டு கல்வி இயக்குநரால் பெரிதும் பாராட்டப் பெற்றது. அநேக ஆங்கிலேய மதபோதகர்கள்- அருட்திரு. கமிர்ர், கிரின், சிவிங்கிளர் மற்றும் எவான்ஸ் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மிகுந்த ஆர்வம் காட்டினர். புனித மைக்கேல், புனித காபீரியேல் மற்றும் பாதுகாப்பு தேவதூதர்கள் விடுதிகள் இவ்வளாகத்தில் நிறுவப்பட்டன. இப்பள்ளியின் சீற்றாலயம் 1939 ஆம் ஆண்டு அருள்திரு ஜீ.டி. செல்வின் என்பவரின் முயற்சியால் கட்டப்பெற்றது. இப்பள்ளி வளாகத்தில் KNII மற்றும் WORLD VISION விடுதிகள் செயல்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.margoschishssnazareth.com/ பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.