உள்ளடக்கத்துக்குச் செல்

தூப்பி-குவரானி மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூப்பி-குவார்னி
புவியியல்
பரம்பல்:
பிரேசில், பொலிவியா, பிரெஞ்சு கயான, பராகுவே, பெரு
வகைப்பாடு: தூப்பி
 தூப்பி-குவார்னி
துணைப்பிரிவுகள்:
துணைக்குழுக்கள் I - VIII


தூப்பி-குவார்னி (பலுக்கல், ஒலிப்பு) என்பது தென் அமெரிக்காவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் குவார்னி மொழியும் பழம் தூப்பி மொழியும் நன்கு அறியப்பட்ட மொழிகள்.

ஆங்கிலத்தில் வழங்கும் :

  • carioca (ரியோடி ஜெனெரோவைக் குறிக்கும் சொல்),
  • capoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு),
  • tapioca (மரவள்ளிக் கிழங்கு),
  • jaguar (தென் அமெரிக்க சிறுத்தை)

முதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூப்பி-குவரானி_மொழிகள்&oldid=2741789" இலிருந்து மீள்விக்கப்பட்டது