உள்ளடக்கத்துக்குச் செல்

தூங்காதே தம்பி தூங்காதே (வெளிவராத திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூங்காதே தம்பி தூங்காதே
இயக்கம்ம. கோ. இராமச்சந்திரன்
தயாரிப்புஎம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
கதைவி. பி. இராமன் (கதை)
கண்ணதாசன், ரவீந்திரன் (உரையாடல்)
இசைஎஸ். எம். சுப்பையா
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பி. சரோஜாதேவி
எம். என். நம்பியார்
எம். என். ராஜம்
ஒளிப்பதிவுஎம். கிருஷ்ணசாமி
வெளியீடுமுடக்கப்பட்டது (1959)
நாடுஇந்தியாஇந்தியா
மொழிதமிழ்

தூங்காதே தம்பி தூங்காதே என்பது ஒரு வெளியிடப்படாத தமிழ் திரைப்படமாகும். எம்ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் இரண்டாவதாக ம. கோ. இராமச்சந்திரன் இப்படத்தைத் தயாரித்து இயக்கி 1959 ஆம் ஆண்டு வெளியிடவிருந்தார். இப்படத்திற்கான கதையை வி. பி. இராமன் எழுத, உரையாடலை கண்ணதாசன், ரவீந்திரன் ஆகியோர் எழுதினர். படத்திற்கான இசையை எஸ். எம். சுப்பையா அமைக்க பாடல்களை கண்ணதாசனும், வித்வான் வே. இலட்சுமணனும் எழுதினர்.[1]

நடிகர்கள்

[தொகு]

முடக்கம்

[தொகு]

1958ஆம் ஆண்டு சீர்காழியில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எம். ஜி. ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அது குணமடைய ஆறு மாதங்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டி வந்தது. அதனால் பொன்னியின் செல்வன், மலைநாட்டு இளவரசன், சிரிக்கும் சிலை, சிலம்புக் குகை, போன்ற மற்றப் படங்களுடன் தூங்காதே தம்பி தூங்காதே தயாரிப்பும் முடக்கப்பட்டது.[2]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. கி. ச. திலீபன் (2016). தினகரன் பொங்கல் மலர் 2016. சென்னை: தினகரன். pp. 116–223.
  2. MGR's Unfinished Movies I | 29 September 2007 | Mgrroop.blogspot.com | 04-11-2016