உள்ளடக்கத்துக்குச் செல்

துளசி ஹெலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளசி ஹெலன் என்றழைக்கப்படும் துளசி ஏகானந்தம், (Thulasi Helen; பிறப்பு 1986) சென்னையில் இருந்து வந்த இளம் பொழுதுபோக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டில் 42 கிலோ முதல் 44 கிலோ வரை உள்ள எடைப் பிரிவில் புது டில்லியில் 23 ஆவது YMCA குத்துச்சண்டை போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அவரது வேகமான கால் இயக்கத்தினாலும் குத்துச்சண்டையின் வேகத்தினாலும் இந்தியாவின் ”தென் முகமது அலி” [1] என்று அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கை

[தொகு]

துளசி ஏகானந்தம் 1986 இல் பிறந்தார். இவரது 12 வயதில், அவருடைய மூத்த சகோதரி குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபெற்றதைப் பார்த்து, தானும் குத்துச்சண்டை பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அதே சமயத்தில் ஒரு குடும்ப தகராறுக்குப் பின் வீட்டிலிருந்து ஓடிப்போனார்[2] அவர் மதத்தை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டதால் அவருடைய பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் பள்ளியிலிருந்து இடையிலேயே நீங்கினார். பின் தாத்தா பாட்டி, நண்பர்கள் விடுதிகளிலும், இரயில் நிலையங்களிலும், கடற்கரையிலும் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வந்தார். அவர் கிடைக்கும் வேலைகளை செய்து பணம் சம்பாதித்தார்.[3] 2000 ஆம் ஆண்டில் 23 ஆவது YMCA குத்துச்சண்டை வாகையர் போட்டியில் 42-44 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு,[2] இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்பு பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, மேரி கோமை வென்றார். ஆனால், 2011 ல், பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடுத்த பின், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்துடன் சரியான இணக்கம் ஏற்படவில்லை. அவர் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டார். அந்த நேரத்தில் அவர் மாநில அணியிலிருந்தும் விலகினார், சில ஆண்டுகளுக்கு அந்த விளையாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார்.[2][3] தலித் பெண் என்று சாதிரீதியாக, தமிழ்நாட்டின் குத்துச்சண்டை சங்கம் உட்பட அனைத்திலும் பாகுபாடுகள் இருந்தபோதிலும், தன் முயற்சிகள் மூலமாகவே தன் வெற்றிகள் அனைத்தும் இருந்ததாக அவர் நம்பினார். இவர் தனது திருமண வாழ்க்கையில் சிலகாலமே இருந்தார், 2016 ஆம் ஆண்டில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்தார், அந்த நேரத்தில் குத்துச்சண்டைப் போட்டிகளில் தொழில்முறையில் பங்கேற்கும் நோக்கத்துடன் பயிற்சியை முனைப்புடன் தொடர்ந்தார்.[2] 2017 களில் அவர் பல தற்காப்புக்கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.[4]

விருதுகள்

[தொகு]

தங்கப்பதக்கம்

[தொகு]
  • 23 ஆவது YMCA குத்துச்சண்டை வாகையர்பட்டம், புது தில்லி, 2000
  • அகில இந்திய அழைப்பு குத்துச்சண்டை வாகையர் பட்டம், அகோலா, 2003

வெண்கலப் பதக்கம்

[தொகு]
  • சர்வதேச குத்துச்சண்டை வாகையர் அழைப்பிதழ், 2002
  • இளம் மகளிர் தேசிய வாகையர், 2002
  • சர்வதேச அழைப்பிதழ் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 2005
  • பெண்கள் தேசிய வாகையர், 2008:(மூத்தோர்)

ஹெலன், 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 30 பதக்கங்களை வென்று[1] 2016 ஆம் ஆண்டில் உலகத் தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (WTCC) சாதனையாளர் விருதை வென்றார்.[2]

திரைப்படம்

[தொகு]

லைட் ஃப்ளை, ஃப்ளை ஹை, சூசன் ஓஸ்டிகார்ட் மற்றும் பீட் ஹோஃப்ஸெத் ஆகியோரால் இயக்கப்பட்ட படம் ஆகியவை ஹெலனை மையப்படுத்திய படமாகவும் விருப்பமற்ற திருமணத்திலிருந்து மீண்டு சுதந்திரத்திற்காக உண்மையில் போராடும் ஒரு இளம் பெண்ணை மையப்படுத்தி சித்தரிக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Siddharth, S.. "Meet Thulasi Helen, the Chennai boxer who once beat Olympian Mary Kom". http://www.thenewsminute.com/article/meet-thulasi-helen-chennai-boxer-who-once-beat-olympian-mary-kom-50919. பார்த்த நாள்: 2017-05-17. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Menon, Priya. "Punching against the odds: Boxer plans a comeback". The Times of India. http://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/punching-against-the-odds-boxer-plans-a-comeback/. பார்த்த நாள்: 2017-05-15. 
  3. 3.0 3.1 "Million Dollar Baby". The Hindu. 2 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/million-dollar-baby/article5643749.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  4. Chandramouli, S.. "A knockout win, in many ways". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/sports/in-other-news/230217/a-knockout-win-in-many-ways.html. பார்த்த நாள்: 2017-05-15. 
  5. "Light Fly, Fly High". International Documentary Filmfestival Amsterdam. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
  6. Holm, Nancy Graham. "Frozen Land, Moving Pictures". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_ஹெலன்&oldid=2721586" இலிருந்து மீள்விக்கப்பட்டது