துர்கா லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிதர் துர்கா லால்
பிறப்பு1948
இறப்பு21 சனவரி 1990(1990-01-21) (அகவை 41–42)
தேசியம்இந்தியர்
பணிகதக் நடனக் கலைஞர்
பிள்ளைகள்2

பண்டிதர் துர்கா லால் (Durga Lal; 1948 - 21 ஜனவரி 1990) [1] செய்ப்பூர் கரானாவின் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் ஆவார். இவர் ராஜஸ்தானின் மகேந்திரகரில் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு கனாஷ்யாம் என்ற நடன நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். நாடகத்திற்கான இசையை ரவி சங்கர் இசையமைத்திருந்தார். பர்மிங்காம் ஓபரா நிறுவனம் தயாரித்தது. [2] இவர் 1984 இல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் [3]

இவர் சுந்தர் பிரசாத்தின் சீடர். ஒரு கதக் நடனக் கலைஞராக இருந்ததோடு, ஒரு பாடகராகவும் இருந்தார். பக்கவாத்தியங்களும் வாசிப்ப்பார். புது தில்லியில் உள்ள தேசிய கதக் நடனக் கழகத்தில் (கதக் கேந்திரா) கதக் கற்பித்தார். லாலின் சகோதரர் பண்டிட் தேவி லால் ஒரு புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் ஆவார். [4] தேவிலாலின் மனைவி கீதாஞ்சலி லாலும் சங்கீத நாடக அகாடமி விருது வென்றவர் (2007). [5] சகோதரர்கள் இருவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். [6]

துர்கா லாலின் மரணத்திற்குப் பிறகு இவரது குழந்தைகள் மற்றும் பிற கலைச் சங்க உறுப்பினர்கள் ஆண்டுதோறும் பண்டிட் துர்கா லால் நினைவு விழாவை ஏற்பாடு செய்கின்றனர். 2021 இல், திருவிழா அதன் 31வது வருடத்தை நிறைவு செய்தது. [7]

பண்டிட் துர்கலாலின் சீடர்களில் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான உமா டோக்ரா, [8] [9] ஜெயந்த் கஸ்துவார் [10] [11] மற்றும் மங்கள பட் ஆகியோர் அடங்குவர். பாக்கிஸ்தானைச் சேர்ந்த நிகாத் சவுத்ரி பண்டிட் லாலின் குறிப்பிடத்தக்க மாணவியாவார்.

குறிப்புகள்[தொகு]

  1. Malini Shah. "Homage to Guruji". Nritya Kala Kendra. Archived from the original on 25 October 2009. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
  2. Anjana Rajan. "Krishna's journey... with Ronu Majumdar". http://www.hindu.com/thehindu/mp/2003/03/03/stories/2003030300450300.htm. பார்த்த நாள்: 25 May 2012. 
  3. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". Sangeet Natak Akademi. Archived from the original on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  4. Anjana Rajan (25 Feb 2008). "On their dancing feat". http://www.hindu.com/mp/2008/02/25/stories/2008022550200100.htm. 
  5. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". Sangeet Natak Akademi. Archived from the original on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012."Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". Sangeet Natak Akademi. Archived from the original on 16 February 2012. Retrieved 25 May 2012.
  6. Anjana Rajan (2 Aug 2003). "Drama in dance". http://www.hindu.com/yw/2003/08/02/stories/2003080200590300.htm. 
  7. Kumar, Bhanu (2021-02-25). "The 31st Pt. Durgalal festival was all about dance". The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/of-movements-and-emotions/article33933562.ece. 
  8. Leela Venkataraman (11 Feb 2011). "Repose in rhythm" இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125123834/http://www.hindu.com/fr/2011/02/11/stories/2011021150450200.htm. பார்த்த நாள்: 25 May 2012. 
  9. Kunal Ray (26 Apr 2012). "Step Up". புனே: Pune Mirror. Archived from the original on 13 September 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  10. Pankaj Thakur. "A Cultural Voyager". அசாம் டிரிபியூன். Archived from the original on 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  11. Rupa Srikanth (31 Dec 2008). "Rhythm reigned supreme" இம் மூலத்தில் இருந்து 27 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090127005530/http://www.hindu.com/ms/2008/12/31/stories/2008123150100800.htm. பார்த்த நாள்: 25 May 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_லால்&oldid=3793812" இலிருந்து மீள்விக்கப்பட்டது