உள்ளடக்கத்துக்குச் செல்

துரு ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரு ஷா
Duru Shah
தேசியம்இந்தியர்
பணிமகப்பேறு மருத்துவர்
அறியப்படுவதுபெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
பிள்ளைகள்அமீரா ஷா

துரு ஷா (Duru Shah) என்பவர் மும்பையைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

பணி

[தொகு]

துரு ஷா பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான மருத்துவ சமூகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். துரு ஷா இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.[1][2][3] இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவ முதுநிலை மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டத்திற்கு மகப்பேறு மருத்துவத்தில் ஆய்வு வழிகாட்டியாகவும் உள்ளார்.[4] இவர் மகளிர் உலகம் கருத்தரிப்பு மையம், மும்பை ஆகியவற்றின் அறிவியல் இயக்குநராக உள்ளார்.[5] துரு ஷா ஐந்து மருத்துவப் புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஷா மெட்ரோபோலிஸ் சுகாதார பொருட்கள் நிறுவன விளம்பரதாரர் ஆவார்.[6] இவர் மகப்பேறியல் மற்றும் மகளீரியல் மருத்துவர், பால் பருவ முடிவு மற்றும் மனித இனப்பெருக்க அறிவியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[7] 2000ஆம் ஆண்டில், மருத்துவர் ஷா "வளரும் பருவம்" என்ற இளம்பருவ இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியத் திட்டத்தைத் தொடங்கினார்.[8] மருத்துவர் ஷா, 2014-ல் நிறுவப்பட்ட, பாலின வன்முறை மற்றும் பெண்கள் உரிமைகளில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான, மகளிர் அதிகாரமளித்தல் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர் மற்றும் அறங்காவலர் ஆவார்.[9]

வெளியீடுகள் (புத்தகங்கள்)

[தொகு]

வகித்த பதவிகள்

[தொகு]
  • இந்தியச் செயற்கைக் கருத்தரிப்பு சங்கத்தின் முன்னாள் தலைவர் - 2017-2018[15]
  • இந்திய மாதவிடாய் நிற்றல் சமூகத்தின் முன்னாள் தலைவர்[4]
  • அசுபையர் இனப்பெருக்க உட்சுரப்பியல் சிறப்புக் குழுவின் தலைவர்
  • இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்கக் குழுவின் இந்தியச் சிறப்புப் பிரிவுத் தலைவர்
  • இந்திய மகப்பேறியல் மற்றும் மகளீரியல் கல்லூரியின் தலைவர்
  • சுகாதார அமைச்சகம், இந்திய அரசு மற்றும் உலக சுகாதாரக் கழக தொழில்நுட்ப நிபுணர்[7]
  • இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிரீயல் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்
  • தலைவர் மும்பை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கம்[16]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]
  • ராயல் மகப்பேறியல் & மகளிரியல் மருத்துவக் கல்லூரியின் கெளரவ விருது- நவம்பர் 2008. [17]
  • மகப்பேறு மற்றும் மகப்பேறியல் பன்னாட்டுக் கூட்டமைப்பின் சிறப்புமிக்க தகுதி விருதைப் பெற்ற முதல் இந்தியர் (2012)[18]

சமூகச்சேவை

[தொகு]

துரு மும்பையின் நகர்ப்புற குடிசைப்பகுதியான தாராவியில் கிஷோரி திட்டத்தைத் தொடங்கினார். இது சமூகம் சார்ந்த இளம் பருவத்தினரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. www.ETHealthworld.com. "IVF could be much cheaper with Indian products : Dr Duru Shah - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). Retrieved 2020-11-04.
  2. Shetty, Disha (2015-09-22). "One out of every 10 Indian women have polycystic ovary syndrome: Dr Duru Shah, Founder President, PCOS Society". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-11-04.
  3. "Google Scholar". scholar.google.com. Retrieved 2020-11-04.
  4. 4.0 4.1 "Home - IMS - International Menopause Society". www.imsociety.org. Retrieved 2020-11-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. www.ETHealthworld.com. "IVF could be much cheaper with Indian products : Dr Duru Shah - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). Retrieved 2021-02-11.
  6. Ramarathinam, Ashwin (2020-06-25). "Metropolis Healthcare promoter sells 6% stake for ₹422.6 crore". mint (in ஆங்கிலம்). Retrieved 2020-11-04.
  7. 7.0 7.1 admin. "Dr. Duru Shah". Aspire 2021 (in Chinese (Taiwan)). Archived from the original on 2020-08-04. Retrieved 2020-11-04.
  8. "Social Commitment - Gynaecologist in Mumbai, India, IVF Clinic & Surrogacy Clinic in Mumbai". drrishmapai.com. Retrieved 2021-01-22.
  9. "Dr Duru Shah". www.centreforsbcc.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-02-11.
  10. Shah, Duru; Allahbadia, Duru And; Gautam (2002). Practical Infertility Management (in ஆங்கிலம்). Orient Blackswan. ISBN 978-81-250-2206-0.
  11. Shah, Duru; Bhathena, R. K.; Shroff (2004). The Polycystic Ovary Syndrome (in ஆங்கிலம்). Orient Blackswan. ISBN 978-81-250-2633-4.
  12. Vaz, Dr Duru Shah With Dr Safala Shroff & Ivor (2005-01-01). Fetal Attraction (in ஆங்கிலம்). Jaico Publishing House. ISBN 978-81-7992-352-8.
  13. Shah, Duru; Shah; Ray (2013-06-30). Clinical Progress in Obstetrics & Gynecology (in ஆங்கிலம்). JP Medical Ltd. ISBN 978-93-5090-444-2.
  14. Shah, Dr Duru; Shroff, Dr Safala (2016-05-23). Pregnancy and You: Plan, Prepare Push! (in ஆங்கிலம்). Jaico Publishing House. ISBN 978-81-8495-878-2.
  15. "EFSS". www.efss-eg.com. Archived from the original on 2020-11-27. Retrieved 2020-11-04.
  16. "Dr Duru Shah is the new President of Indian Society of Assisted Reproduction". IndiaMedToday (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-29. Retrieved 2020-11-04.
  17. "THE EGYPTIAN FERTILITY AND STERILITY SOCIETY". REPRODUCTIVE HEALTH Update on the Land of Pharaohs: 16. https://www.efss-eg.com/assets/docs/history/2011_program_preface.pdf. 
  18. "Duru Shah: Empowering the women of India". Express Healthcare (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-11-15. Retrieved 2020-11-04.
  19. "If you educate the girl and the mother, you are educating the family ... and an entire nation". Express Healthcare (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-03-06. Retrieved 2021-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரு_ஷா&oldid=3732590" இலிருந்து மீள்விக்கப்பட்டது