துருவா (2016 தெலுங்குத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருவா என்பது 2016 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும்.[1] சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸின் அல்லு அரவிந்தின் தயாரிப்பில் வெளிவந்தது. ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் அரவிந்த் சாமி, ரகுல் ப்ரீத் சிங், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். 2015 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுவெளியீடு ஆகும். (2017 ஆம் ஆண்டு இந்தியில் டபுள் அட்டாக் 2 என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது).[2] இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு திசம்பர் 9 இல் உலகளவில் வெளியிடப்பட்டது.

துருவா
இயக்கம்சுரேந்தர் ரெட்டி
தயாரிப்பு
  • அல்லு அரவிந்த்
  • என். வி. பிரசாத்
கதைவீம ரெட்டி (வசனம்)
சிவ கோபால் கிருஸ்ணா (இந்தி வசனம்)
மூலக்கதைதனி ஒருவன்
படைத்தவர் மோகன் ராஜா
திரைக்கதைசுரேந்தர் ரெட்டி
இசைகிப்கொப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
படத்தொகுப்புநவீன் நூலி
கலையகம்கீதா ஆர்ட்ஸ்
விநியோகம்கீதா ஆர்ட்ஸ்
வெளியீடுதிசம்பர் 9, 2016 (2016-12-09)
ஓட்டம்165 minutes
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு50 கோடி[3]
மொத்த வருவாய்87.55 கோடி[3]

கதைச்சுருக்கம்[தொகு]

ஐ. பி. எஸ். அதிகாரியான துருவா (ராம் சரண்) குற்றங்களை வெறுப்பவர். சிறு வயதிலேயே குற்றங்களை பற்றிய செய்திகளை தேடி அவற்றிற்கான காரணங்களை அறிந்து கொள்கிறார். அவர் குற்றங்களை தடுப்பதற்காகவே ஐ. பி. எஸ் இல் சேருகிறார். சிறிய குற்றங்களுக்கு எல்லாம் காரணமான ஒரு பெரிய குற்றவாளியை பிடிப்பதுதான் அவரது இலட்சியம் ஆகும். சிறிய சந்தர்ப்பங்களையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் சித்தார்த் அபிமன்யூ (அரவிந்த்சாமி) விடா முயற்சியில் படித்து விஞ்ஞானியாக ஆகிறார். இந்த இரண்டு பேருக்கும் இடையிலான மோதலே படத்தின் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

  • ராம் சரண் - துருவா ஐ.பி.எஸ்
  • அரவிந்த்சாமி - டாக்டர் சித்தார்த் அபிமன்யு
  • ரகுல் ப்ரீத் சிங் - இஷிகா
  • நவ்தீப் - கவுதம் ஐ.பி.எஸ்
  • போசனி கிருஷ்ணா முரளி - செங்கலராயுடு
  • சயாஜி சிண்டே - தீராஜ் சந்திரா
  • அபிநயா - அக்சரா
  • நாசர் - கட்சித் தலைவர்/ முதல்வர்
  • பரா கரீமா - ப்ரீத்தி
  • அலி ரேசா - ரன்வீர் சிங் ஐ.பி.எஸ் / துருவாவின் நண்பன்
  • வித்தியலேகா ராமன் - இஷிகாவின் தோழி
  • இமாஜா - இஷிகாவின் தோழி
  • சவ்ரவ் சக்ரவர்த்தி - அப்பாஸ்
  • மதுசூதனன் ராவ் - இர்பான் அலி
  • ரந்தீர் கட்லா - ரன்வீர்
  • அஜய் ரத்தினம் - இஷிகாவின் தந்தை
  • ராமரோ - சூர்யா

தயாரிப்பு[தொகு]

இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பு ஆகும்.[4] நவ்தீப் ராம் சரணின் நண்பனாகவும், காவல்துறை அதிகாரியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[5] இந்த திரைப்படத்திற்காக ராம் சரண் சுல்தான் மற்றும் தங்கல் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற உடலமைப்பாளர் ராகேஷ் உடியாரின் கீழ் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.[6] துருவா திரைப்படத்தின் கதாநாயகியாக முதலில் சுருதி ஹாசன் தெரிவு செய்யப்பட்டாலும் கால அட்டவணை முரண்பாட்டினால் அவரது நிராகரிப்பின் பின்னர் ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக ராம் சரணுடன் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். [சான்று தேவை] 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று படப் பிடிப்பு ஆரம்பமானது.[7]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கிப்கொப் தமிழா (இசைக்கலைஞர்கள் ஆதி மற்றும் ஜீவா) தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தார்கள்.[8] பாடல்கள் புதிதாக இயற்றப்பட்டாலும் தமிழ் பதிப்பில் இருந்து ஒரு பாடல் எடுக்கப்பட்டது. ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் இந்து மொழியிலும் பதிவு செய்யப்பட்டன.[9]

வெளியீடு[தொகு]

துருவா திரைப்படம் ஆரம்பத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது. பின்னர் 2016 ஆம் ஆண்டு திசம்பர் 9 இல் உலகளவில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தில் ராம் சரண் மற்றும் அரவிந்த் சுவாமியின் நடிப்பு பார்வையாளர்களாலும், திரைப்பட விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.[10] மேலும் இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. 2017 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்தி பதிப்பு எம் / எஸ் மந்திரா இந்தியா டிஜிட்டல் கிரியேஷன்ஸ் எல்எல்பி இனால் வெளியிடப்பட்டது. இந்தி பதிப்பில் ராம் சரணுக்கு அஜய் தேவ்கனும், அரவிந்த் சுவாமிக்கு அர்பாஸ் கானும் குரல் பதிவு செய்திருந்தனர்.[11]

மறு உருவாக்கம்[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். வங்காள மொழியில் வன் (one) என்ற தலைப்பில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "Exclusive: Ram Charan's action thriller Dhruva clears Censor Board". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  2. kavirayani, suresh (2016-02-19). "Ram Charan's new movie launched". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  3. 3.0 3.1 "Dhruva 3 week collection Ram Charan Starrer Crosses 85 Crore Mark in 21 days". IBtimes.com. Retrieved on 30 December 2016.
  4. kavirayani, suresh (2016-02-19). "Ram Charan's new movie launched". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  5. "Navdeep to play a cop in Thani Oruvan remake - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  6. "Dhruva: Ram Charan trains with Sultan and Dangal trainer, Rakesh Udiyar". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  7. "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". News18 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  8. "Hip hop tamizha on Dhruva". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. Dhruva - Manishi Musugulo Mrugam Neney Ra Telugu Song | Ram Charan , Rakul Preet Singh, பார்க்கப்பட்ட நாள் 2019-10-22
  10. "Ram Charan Teja's Dhruva to release on December 9". The Indian Express (in Indian English). 2016-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  11. "Ajay Devgn and Arbaaz Khan dub for the hindi version of 'Dhruva' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.