துரியோதன் மாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரியோதன் மாஜி

துரியோதன் மாஜி (Duryodhan Majhi) (14 ஏப்ரல் 1938 - 11 ஜனவரி 2022) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். [1]

சுயசரிதை[தொகு]

நூவாபடா மாவட்டத்தில் உள்ள காரியார் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மாஜி. இவர் காரியார் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராக முதன்முதலில் 1990- ஆம் ஆண்டிலும், 1995-ஆம் ஆண்டிலல் மீண்டும் ஒருமுறையும் ஒடிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராகவும், 2009- ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சராகவும், சுகாதாரத் துறை அமைச்சராகவும், குடும்ப நலத் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார் இவர் 2014-ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளத்திலிருந்து விலகினார். 2014-ஆம் ஆண்டில் ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். [2] [3] மாஜி புவனேஸ்வரில் 11 ஜனவரி 2022 அன்று தனது 83 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
  2. "Former Odisha Minister Dies". United News of India. http://www.uniindia.com/former-odisha-minister-dies/east/news/2617926.html. 
  3. Pioneer, The, "Duryodhan quits BJD, may be Khariar BJP candidate", The Pioneer (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-04
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரியோதன்_மாஜி&oldid=3821008" இலிருந்து மீள்விக்கப்பட்டது