துபாய் பட்டாம்பூச்சி தோட்டம்

ஆள்கூறுகள்: 25°03′42″N 55°14′48″E / 25.06176°N 55.24654°E / 25.06176; 55.24654
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபாய் பட்டாம்பூச்சி தோட்டம்
Dubai Butterfly Garden
حديقة الفراشات بدبي
தோட்டத்தின் காட்சி
வகைபட்டம்பூச்சி வீடு
அமைவிடம்துபாய்லேண்டு, அல் பர்சா 3, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறு25°03′42″N 55°14′48″E / 25.06176°N 55.24654°E / 25.06176; 55.24654
பரப்பு2,600 m2 (28,000 sq ft)
திறக்கப்பட்டது2015
Collections15,000 பட்டாம்பூச்சி, 50 இனம் (உயிரியல்)
Websitewww.dubaibutterflygarden.com

துபாய் பட்டாம்பூச்சி தோட்டம் (Dubai Butterfly Garden) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தின் அல்பர்சா 3 பகுதியில்[1][2] பட்டாம்பூச்சிகளுக்காக அமைந்துள்ள ஒரு தோட்டமாகும்.[3] துபாய் பட்டாம்பூச்சி தோட்டம் உலகின் மிகப்பெரிய மற்றும் பிராந்தியத்தின் முதல் உள்ளரங்க பட்டாம்பூச்சி தோட்டமாகும்.[4]

2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டத்தில் 50 இனங்களைச் சேர்ந்த 15,000 பட்டாம்பூச்சிகள் உள்ளன.[4] ஒரு பட்டாம்பூச்சி அருங்காட்சியகம், 24 பாகை செல்சியசு வெப்பநிலையில் பராமரிக்கப்படும் பத்து குவிமாடங்கள், இரண்டாவது குவிமாடத்தில் கொய் மீன் குளம் மற்றும் கல்விப் பகுதி[1] ஆகியவையும் இத்தோட்டத்தில் அடங்கும். 2600 சதுர மீட்டர் பரப்பளவைக்[2] கொண்டுள்ள துபாய் பட்டாம்பூச்சி தோட்டம் துபாய் அதிசயத் தோட்டத்திற்கு வடகிழக்கில் தனி நுழைவாயிலுடன் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dubai Butterfly Garden reiew". MyBayut. Bayut. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
  2. 2.0 2.1 "Dubai Butterfly Garden". Places to visit. Visit Dubai. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
  3. "Dubai Butterfly Garden in Dubailand". Dubaifw.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.
  4. 4.0 4.1 "Dubai Butterfly Garden: The Complete Guide". Headout. 30 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2022.

புற இணைப்புகள்[தொகு]