துத்திக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துத்திக்கீரை
Bō-á-tún ê hoe.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ்
தரப்படுத்தப்படாத: யூடிகாட்ஸ்
தரப்படுத்தப்படாத: ரோசிட்ஸ்
வரிசை: மால்வாலேஸ்
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: அபுடிலான்
இனம்: ஏ. இண்டிகம்
இருசொற் பெயரீடு
அபுடிலான் இண்டிகம்
(லிங்க்) சுவீட்[1]
வேறு பெயர்கள்

சிடா இண்டிகா கரோலஸ் லின்னேயஸ்

துத்திக்கீரை அல்லது வட்டத்துத்தி (Abutilon indicum , Indian Mallow) புதர் கையைச் சார்ந்த செடி ஆகும். துத்தி விதை மூலம் இனப்பெருக்கம் அடைகின்றது. துத்திக்கீரையில் இலை, வேர்,பட்டை, பூ ஆகியவை பயன் தரும் பகுதிகள் ஆகும். இதில் சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன.

பெயர்கள்[தொகு]

இதற்கு கக்கடி, கிக்கசி, அதிபலா போன்ற வேறுபெயர்களும் உண்டு. ‘துத்தி’ என்றால் உண்ணக்கூடியது என்ற பொருளை அகராதி தருகிறது.

விளக்கம்[தொகு]

துத்தியானது புதர்ச் செடி வகையாகும்.இவை அகன்ற இதய வடிவமுடைய இலைகளைக் கொண்டதாகவும், அதன் விளிம்புகளில் ரம்பங்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டதாக காணப்படும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரோம வளரிகள் உள்ளன. சிறுபிளவுகள் கொண்ட பெரிய ‘தோடு’ போன்ற இதன் காய்கள் வித்தியாசமான தோற்றம் கொண்டவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abutilon indicum". Pacific Island Ecosystems at Risk. பார்த்த நாள் 2008-06-18.
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (2018 ஆகத்து 11). "நோயைத் துரத்தும் துத்தி". கட்டுரை. டாக்டர் வி.விக்ரம் குமார். பார்த்த நாள் 12 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்திக்கீரை&oldid=2562596" இருந்து மீள்விக்கப்பட்டது