உள்ளடக்கத்துக்குச் செல்

துணைமெய்நிகராக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணைமெய்நிகராக்கம் (ஆங்கிலம்: Paravirtualization) என்பது பல இயங்குதளங்களை ஒரே பெளதீக வன்பொருளில் இயக்குதவதை ஏதுவாக்க உதவும் ஒரு வழிமுறை அல்லது மென்பொருள் ஆகும். வன்பொருள் மெய்நிகராக்கம் போலன்றி வன்பொருளில் எல்லா வளங்களையும் மெய்நிகராக்காமல், துணைமெய்நிகராக்க மென்பொருள் இயங்குதளங்களுடன் சேர்ந்து இயங்கி மெய்நிகராக்கத்தைச் செய்கிறது. இந்த சேர்ந்தியங்கலை ஏதுவாக்கும் வண்ணம் விருந்துனர் இயங்குதளங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். சென், யூசர் மோட் லினக்சு (யு.எம்.எல்) ஆகியவை இத்தகைய மெய்நிகராக்கத்துக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணைமெய்நிகராக்கம்&oldid=1370415" இலிருந்து மீள்விக்கப்பட்டது