வன்பொருள் மெய்நிகராக்கம்
Jump to navigation
Jump to search
வன்பொருள் மெய்நிகராக்கம் (ஆங்கிலம்: Hardware virtualization) என்பது ஒரு கணினி அல்லது வழங்கியின் பெளதீக வன்பொருளை புரவல் மென்பொருள் ஊடாக முழுமையாக நிர்வாகித்து ஒரு மெய்நிகராக்க கணினிச் சூழலை உருவாக்குதல் ஆகும். இவ்வாறு முழு வளங்களையும் மெய்நிகராக்குவதன் மூலம் ஒரே பெளதீக வன்பொருளில் பல விருந்துனர் இயங்குதளங்களை இயக்க முடியும். விருந்துனர் இயங்குதளங்கள் தாம் நேரடியாக பெளதீக வன்பொருளில் இயங்குவது போன்றே தொழிற்படுவதால் அவற்றில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. இந்த அணுகுமுறையில் சில கட்டளைகளை இயகுவதற்கு கண்காணிப்பாளாராகவும், இடைத்தரகரகவும் செயற்பட மெய்நிகராக்கி தேவை. வி.எம்.வெயர், வேற்சுவல் பொக்சு, கைப்பர்-வி ஆகியவை வன்பொருள் மெய்நிகராக்க மென்பொருட்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.