உள்ளடக்கத்துக்குச் செல்

துடிப்பண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GB1508 துடிப்பண்டத்தின் ஒரு மாதிரி

துடிப்பண்டம் (quasar, QUASi-stellAR radio source) அல்லது பகுதி உடுக்கணக் கதிர்வீச்சு வாயில் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் மிகப்பெரும் கதிர்வீச்சு வாயில் ஆகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் ஆற்றல் பேரளவு பொலிவுள்ள விண்மீன்கள், ஏன்? பல நூறு அண்டங்களின் கூட்டு ஆற்றலை மீறும்! தொலைநோக்கியில் ஒரு துடிப்பண்டம் ஒரு புள்ளி ஒளிவாயில் போல் தென்படும். துடிப்பண்டங்கள் அதிக சிவப்புப் பெயர்ச்சியைக் (red shift) கொண்டவை. இந்தச் சிவப்புப்பெயர்ச்சிக்கு துடிப்பண்டங்களின் நெடுந்தொலைவே காரணம் என கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துடிப்பண்டம்&oldid=3216819" இலிருந்து மீள்விக்கப்பட்டது