உள்ளடக்கத்துக்குச் செல்

துகாராம் (1938 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகாராம்
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புசென்ட்ரல் ஸ்டூடியோஸ், கோவை
நடிப்புமுசிரி சுப்பிரமணிய ஐயர்
கே. சாரங்கபாணி
எம். எஸ். முருகேசம்
ஆர். பாலசுப்பிரமணியம்
கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்
கே. சீதா
மீனாம்பாள்
ஆர். பாலசரஸ்வதி தேவி
வெளியீடுசெப்டம்பர் 17, 1938
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துகாராம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது. பிற்காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக விளங்கிய ஆர். பாலசரஸ்வதி இத்திரைப்படத்தில் சிறுமி வேடத்தில் துகாராமின் மகளாக நடித்திருந்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

சிறு தகவல்

[தொகு]

பிரபல கருநாடக இசை வித்துவானாகிய முசிரி சுப்பிரமணிய ஐயர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் மீசை வளர்த்தார். இதையிட்டு கல்கி ஆனந்த விகடன் இதழில் எழுதிய துகாராம் திரைப்பட விமர்சனத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

பாடல்கள்

[தொகு]

இப்படத்தின் பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை.[1] பாடல்கள் கொலம்பியா இசைத்தட்டுகளில் வெளிவந்தன.

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 கை, ராண்டார் (11 ஜனவரி 2008). "Tukaram 1938". தி இந்து. Archived from the original on 2016-11-25. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "'துகாராம்' பட விமரிசனம்". பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகாராம்_(1938_திரைப்படம்)&oldid=3880980" இலிருந்து மீள்விக்கப்பட்டது