தீவுக்கோட்டை
Jump to navigation
Jump to search
தீவுக்கோட்டை (Tivukottai) இதன் ஆங்கில மொழிவழக்கான தேவிக்கோடை (Devicottah) என்ற பெயரில் மிகப் பிரபலமாக அறியப்படுகிறது, கொள்ளிடம் ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்தில் இத்தீவு உள்ளது. இதை 1749 இல் தஞ்சாவூர் மராத்திய மன்னர் சாகுஜியிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. ஆங்கிலேயர்கள் தீவுக்கோட்டையில் ஒரு துறைமுகத்தை உருவாக்கி அந்த இடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர். சிறிது காலத்துக்குப் பின்னர் இந்தக் கோட்டையானது பிரஞ்சுக்கார்களால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலோ- பிரெஞ்சு போரின் போது மீண்டும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இவ்விடம் ஆங்கிலேயர்களிடம் 1760 வரை இருந்து வந்தது. இந்தக் கோட்டை தகுதியற்றதாக கருதபட்டு, பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, தீவு கைவிடப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- Hemingway, F. R. (1906). Madras District Gazetteers: Tanjore. Government Press, Madras. பக். 255–256.