தீபிகா உதகாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபிகா உதகாமா
தேசியம்இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்பு பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர், செயல்பாட்டாளர்

தீபிகா உதகாமா (Deepika Udagama) என்பவர் இலங்கையின் பேராசிரியை, கல்வித்துறை நிர்வாகி, மனித உரிமை ஆர்வலர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1] பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் (ஐ.நா.) துணை ஆணைக்குழுவின் இலங்கையின் மாற்று உறுப்பினராகவும், உலகமயமாக்கல் மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்த ஐக்கிய நாடுகளின் துணை ஆணைக்குழுவின் இணை சிறப்பு நிருபராகவும் பணியாற்றினார். கலாநிதி உதகமா சட்ட பீடத்தில் மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராக இருந்தார். இவர் இலங்கை அறக்கட்டளையின் மக்களாட்சி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றுகிறார். இவர் இளங்கலைச் சட்டம் மற்றும் முதுநிலை சட்டப் படிப்பினையும் (கொழும்பு பல்கலைக்கழகம்) கூடுதலாகச் சட்டப் படிப்பினை கலிபோர்னியாவிலும் முடித்துள்ளார்.[2]

3 ஆகத்து 2020 அன்று, உதகாமா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. www.cmb.ac.lk பரணிடப்பட்டது 2007-09-05 at the வந்தவழி இயந்திரம், unknown, unknown (accessed 23 August 2007)
  2. "Human Rights Defender Deepika Udagama quits as Chair of the Human Rights Commission". EconomyNext. 2020-08-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Dr. Deepika Udagama resigns as HRCSL Chairperson | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. admin (2020-08-03). "Human Rights Commission chairperson Deepika Udagama resigns | Colombo Gazette" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_உதகாமா&oldid=3667072" இலிருந்து மீள்விக்கப்பட்டது