தீபா சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபா சாரி
பிறந்தது
மும்பை, இந்தியா
தொழில் நடிகை
ஆண்டுகள் செயலில் 2008–தற்போது
துணைவர் கஜேந்திர யாதவ் [1]
இணையதளம் www.deepachari.com பரணிடப்பட்டது 2010-05-03 at the வந்தவழி இயந்திரம்

தீபா சாரி (Deepa Chari) என்பவர் இந்திய நடிகை மற்றும் நீச்சலுடை வடிவழகர்[2] கோலிவுட்டில் பணிபுரியும் நடிகை ஆவார்.

பின்னணி[தொகு]

சாரி இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே வடிவழகர் தொழில் செய்யத் தொடங்கினார். மும்பையில் மிகவும் விரும்பப்படும் பிகினி வடிவழகர்களில் ஒருவரானார்.

தொழில்[தொகு]

வணிக முத்திரை அங்கீகரிப்பது முதல் பிகினி அணிந்த நாட்காட்டி வடிவழகர் என எண்ணற்ற வடிவழகி பணிகளைச் சாரி பெற்றுள்ளார். சாரி மனிஷ் மல்ஹோத்ரா, விக்ரம் பட்னிஸ், ஹேமந்த் திரிவேதி மற்றும் கிருஷ்ணா மேத்தா போன்ற வடிவமைப்பாளர்களுடன் பல்வேறு கண்காட்சி நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

சாரி, பல்வேறு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இசைத் தொகுப்புகளிலும் தோன்றினார். புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்றினார். வினய் சப்ரு மற்றும் ராதிகா ராவ் இயக்கிய மறுதயாரிப்பான "காந்த லகா" மற்றும் அனுபவ சின்ஹா தயாரிப்பில் "சயான் தில் மே ஆனா ரே" ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில.

தற்போதைய இந்தியப் பொழுதுபோக்கு காட்சியில் மிகவும் திறமையான நடனக் கலைஞர்களில் சாரியும் ஒருவர். மேலும் அனுபவ் சின்ஹாவின் கபூதர் என்ற இந்தி படத்திலும் சாரி, நடித்துள்ளார். கபூதர் திரைப்படம் ஆசிய மற்றும் அரபு திரைப்பட 10வது ஓசியன்ஸ்-சினிஃபன் விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. சாரி 2009ஆம் ஆண்டு பாலம் திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். திரைக்கு வரவிருக்கும் திரைப்படமான KA-99-B-333 இல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில் சாதனைகள்[தொகு]

  • வெற்றி, கிளாட்ராகா வடிவழகிப் போட்டி 2004.
  • ”சிறந்த உடலமைப்பு”. வெற்றியாளர், உலகப் போட்டியின் சிறந்த வடிவழகி 2003-2004.
  • துருக்கியில் நடைபெற்ற "உலகின் சிறந்த புன்னகை" வெற்றி.
  • வெற்றியாளர், மிஸ் டூரிசம் ஆஃப் வேர்ல்ட் 2004-2005.
  • 2004-2005 "ஆண்டின் சிறந்த புன்னகை" வெற்றி, மலேசியா

திரைப்படவியல்[தொகு]

இந்த படத்தொகுப்பு தீபா சாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆண்டு படம் பங்கு மற்ற குறிப்புகள்
2010 பாலம்
2008 கேஏ-99 பி-333

மேற்கோள்கள்[தொகு]

  1. "Model Deepa Chari weds in Jaipur".
  2. "Models of Bangalore Fashion Week | CITYROCKZ", 29 January 2010,CityRockz-dee

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_சாரி&oldid=3677174" இலிருந்து மீள்விக்கப்பட்டது