தீபாவளி (சைனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபாவளி
பாவாபுரி மகாவீரர் வீடுபேறு அடைந்த இடம்
பிற பெயர்(கள்)Translation: மகாவீர் மோக்சா கல்யாணக்
கடைபிடிப்போர்சைனம்
வகைமதம், இந்தியா (தேசிய விடுமுறை)
முக்கியத்துவம்மகாவீரர் வீடுபேறு அடைந்தது
கொண்டாட்டங்கள்சைன கோவில்களுக்கு செல்லுதல்
அனுசரிப்புகள்இறை வழிபாடு, சைனம்
நாள்அமாவாசை கார்த்திகை (தமிழ் மாதம்)
நிகழ்வுஆண்டுதோறும்

சைன மதத்தில் தீபாவளி (Diwali (Jainism) மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இது தற்போதைய அண்ட யுகத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்ததனைக் குறிக்கிறது. இது இந்துக்களின் தீபாவளி பண்டிகையான அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களுக்கு அந்த ஆண்டின் முடிவையும், அவர்களின் 24ஆவது தீர்த்தங்கர மகாவீரரின் நினைவு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது[1].

வரலாறு[தொகு]

மகாவீரர் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் அக்டோபர் 15 ஆம் நாள் வீடுபேறு அடைந்தார் என சதிவாசகா உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த சகாப்தத்தின் 24 வது தீர்த்தங்கரரான மகாவீரர் சைன மதத்திற்கு புத்துயிர் அளித்தார்.மரபுப்படி மகாவீரரின் தலைமை சீடரான கணாதரர் இதே நாளில் ஞானம் பெற்றார். எனவே சைன மதத்தில் இந்தத் தீபாவளி பண்டிகையானது மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

மகாவீரரின் வீடுபேறு அடைந்த நாள் தான் தீபாவளி என சைன புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சார்யா ஜிவசேனா என்பவரால் எழுதப்பட்ட ஹரிவம்ச புராணத்தில் தீபாவளி பற்றிய குறிப்பு உள்ளது. அந்த நூலில் தீபாவளிகயா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதுவே தீபாவளி பற்றிய மிகப் பழமையான சான்றாகக் கருதப்படுகிறது [2]. மேலும், இந்த நூல் கி.பி 705 ஆம் ஆண்டில் சாலிவாகன ஆண்டு காலத்தில் இயற்றப்பட்டது.

கொண்டாட்டம்[தொகு]

தீபாவளி காலையில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சைன கோவில்களிலும் மகாவீரரிடம் பிரார்த்தனை செய்தபின் நிர்வான் லட்டு வழங்கப்படுகிறது. [3] சைன மதத்தின் மிக முக்கியமான கொள்கை அகிம்சை, இதனால் அவர்கள் வாழும் உயிர்களுக்குத் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவர்கள் தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க முயல்கின்றனர்.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாவளி_(சைனம்)&oldid=3823557" இருந்து மீள்விக்கப்பட்டது