பாவாபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Pawapuri पावापुरी

பாவாபுரி
पावापुरी
நகரம்
பாவாபுரியில் சமணர்களின் நீர்க்கோயில்
பாவாபுரியில் சமணர்களின் நீர்க்கோயில்
பாவாபுரி is located in பீகார்
பாவாபுரி
பாவாபுரி
பாவாபுரி is located in இந்தியா
பாவாபுரி
பாவாபுரி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாவாபுரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°05′30″N 85°32′20″E / 25.09167°N 85.53889°E / 25.09167; 85.53889ஆள்கூறுகள்: 25°05′30″N 85°32′20″E / 25.09167°N 85.53889°E / 25.09167; 85.53889
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்நாலந்தா
தோற்றுவித்தவர்இராஜா தருமபாலன்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மகதி மொழி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகமைந்த நகரம்பாட்னா
இணையதளம்www.pawapuritirth.org

பாவாபுரி (Pawapuri) (இந்தி: पावापुरी) சமணர்களின் புனிதமான இத்தலம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. பாவாபுரி நகரம், ராஜகிரகத்திலிருந்து 19 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 101 கிமீ தொலைவிலும் உள்ளது. [1]பாவாபுரி நகரத்தில் மகாவீரர் மறைந்தார். மகாவீரருக்கு அர்பணிக்கப்பட்ட ஜல் மந்திர் இந்நகரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆட்சிக் காலத்தில், மகாவீரர் பாவாபுரிக்கு வருகை புரிந்த போது, பாவாபுரியின் குறுநில மன்னர் ஹஸ்திபாலனுடன் தங்கியிருந்தார். [2]

மகாவீரர் பரிநிர்வானம் எய்திய பின்னர் பாவாபுரியில் அவரது உடல் எரிக்கப்பட்டது. [3]மகாவீரரின் சாம்பலை மக்கள் கூட்டம் கூட்டமாக அள்ளிச் சென்றதால், அவ்விடம் பள்ளமாகி ஒரு குளம் போல் காட்சியளித்தது. [4]

தற்போது அக்குளத்தின் நடுவே ஜல் மந்திர் எனும் பெயரில் மகாவீரருக்கு கோயில் எழுப்பட்டுள்ளது. மகாவீரர் இறுதியாக மக்களுக்கு தருமத்தை உபதேசித்த பாவாபுரியில், கோன் மற்றும் சமோசரன் போன்ற சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. [4]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Destinations :: Pawapuri ::Bihar State Tourism Development Corporation". Bstdc.bih.nic.in. பார்த்த நாள் 2012-03-05.
  2. "Digambar Jain temple Pavapuri or Pawapuri". Digambarjainonline.com. பார்த்த நாள் 2012-03-05.
  3. http://www.pawapuritirth.org
  4. 4.0 4.1 "Bihar State Tourism Development Corporation". Pawapuri. பார்த்த நாள் 2009-03-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவாபுரி&oldid=2438573" இருந்து மீள்விக்கப்பட்டது