தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி
தாய்லாந்தின் இளவரசர்
2019இல் தாய்லாந்தின் இளவரசர்
குடும்பம் மோகிதோல் (சக்ரி வம்சம்)
தந்தை மகா வச்சிரலோங்கோன் (பத்தாம் ராமா)
தாய் சிறீராஸ்மி சுவாதி
பிறப்பு 29 ஏப்ரல் 2005 (2005-04-29) (அகவை 16)
சிறீராஜ் மருத்துவமனை, பேங்காக், தாய்லாந்து
சமயம் தேரவாத பௌத்தம்

இளவரசர் தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி சிரிவிபுல்ய ராஜகுமார் (பிறப்பு 2005 ஏப்ரல் 29; Prince Dipangkorn Rasmijoti Sirivibulya rajakumar) தாய்லாந்து நாட்டின் சக்ரி வம்சத்தின் உறுப்பினரும், தாய்லாந்து சிம்மாசனத்தின் வாரிசுமாவார். இவர் வச்சிரலோங்கோன் மன்னரின் ஐந்தாவது மகனும், ஏழாவது இளைய குழந்தையாவார். இவரது தாயார் சிறீராஸ்மி சுவாதி, மன்னரின் மூன்றாவது சட்டப்பூர்வ மனைவியாவார். இவரது தந்தைக்கு முதல் மனைவி மூலம் பஜ்ரகிட்டியபா என்ற ஒரு மகளும், இரண்டாவது மனைவி மூலம் ஐந்து குழந்தைகளும் (நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள்) உள்ளனர். இரண்டாவது மனைவியின் அனைத்து குழந்தைகளும் அப்போதைய மகுட இளவரசர் தங்கள் தாயை திருமணம் செய்வதற்கு முன்பு பிறந்தவர்கள். ஆனால் அவர்களது திருமணத்தால் சட்டபூர்வமானவர்கள். பட்டத்து இளவரசர் தனது இரண்டாவது மனைவியை 1996 இல் விவாகரத்து செய்த பிறகு, அவர் தனது நான்கு மகன்களையும் மறுத்துவிட்டார். இவர் மட்டுமே மன்னரின் அங்கீகரிக்கப்பட்ட மகனாவார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

இளவரசர் 29 ஏப்ரல் 2005 அன்று பாங்காக்கில் உள்ள சிறீராஜ் மருத்துவமனையில் பிறந்தார். 15 சூன் 2005 அன்று, மன்னர் பூமிபால் அதுல்யாதெச் இளவரசரின் பெயரை தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி என அறிவித்தார்.

இளவரசர் "மாட்சிமை தாங்கிய இளவரசர்" என்ற பாணியில் அறியப்பட்டார். இளவரசரின் முதல் மாதத்தைக் கொண்டாடும் விதமாக பிரா ராட்சாபிதி சோம்போட் டியூயன் லா குயென் ஃபிரா யு என்று அழைக்கப்படும் ஒரு அரச விழா 2005 சூன் 17 அன்று பேங்காக்கில் உள்ள அனந்தா சமகோம் சிம்மாசன அரங்கில் நடைபெற்றது.

ஜெர்மனியின் பவேரியன் சர்வதேசப் பள்ளியில் வெளிநாட்டில் படிக்கச் செல்வதற்கு முன்பு இளவரசர் தனது கல்வியை துசித் அரண்மனையில் உள்ள சித்ரலதா பள்ளியில் தொடங்கினார். [2]

அடுத்தடுத்த வரிசையில் நிலை[தொகு]

இளவரசர் தனது தந்தையின் வாரிசாகவும், சக்ரி வம்சத்தில் அடுத்து முடிசூட இருக்கிறார். இருப்பினும், இவரது தந்தை வச்சிரலோங்கோன் 2014 திசம்பரில் இவரது தாய் சிறீராஸ்மியை விவாகரத்துசெய்ததால், அடுத்தடுத்த வரிசையில் இவரது நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது. 1996 இல் வச்சிரலோங்கோன் தனது இரண்டாவது மனைவியுடனான உறவை முடித்தபோது, அவர்களுடைய நான்கு மகன்களையும் மறுத்து, அவர்கள் அரச பட்டங்களை கைவிட்டதாகக் கூறினார். இருப்பினும், அரண்மனைச் சட்டம் இவர் தனது "மாட்சிமை தாங்கிய இளவரசர்" என்ற பாணியைப் பயன்படுத்துவதற்கான உரிமையை தொடர்ந்து அங்கீகரித்தது. [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]