தி லிட்டில் பிளவர் கம்பெனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தி லிட்டில் பிளவர் கம்பெனி (லிப்கோ) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பதிப்பகமாகும். இப்பதிப்பகம் குறிப்பாக ஆங்கிலம் - தமிழ் அகராதிக்காக அறியப்பட்ட்டது.

இந்தப் பதிப்பகமானது கடலூரில் இருந்து சென்னைக்கு குடியேறிய வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவரால் 1952 இல் சென்னை ரங்கநாதன் தெருவில், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகமாக துவக்கப்பட்டது. அப்போது எஸ் எஸ் எல் சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு ஆங்கில இலக்கணக் குறிப்புகளை வெளியிட்டது. 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கில அகராதி வெளியிட்டுவருகின்றனர்.[1] படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம் பின்னர் லிஃப்கோ என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தப் பதிப்பகத்தைத் துவக்கியதிலிருந்து இதுவரை, பத்து விதமான அகராதிகளைப் இது பதிப்பித்துள்ளது. இந்தப் பதிப்பகம் அகராதிகளைத் தவிர ஆன்மீக நூல்களையும் வெளியிட்டு வருகிறது. லிப்கோ இதுவரை பதிப்பித்த 728 நூல்களில் 433 நூல்கள் ஆன்மீகம் தொடர்பானவையாகவும், 200 நூல்கள் இதர துறைகளாகவும் வெளிவந்திருக்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கே.பாலசுப்பிரமணி (2017 ஆகத்து 10). "இதற்காகதான் எங்கள் இடத்தை சரவணா ஸ்டோர்ஸிடம் விற்றோம்! அங்காடித் தெருவின் கதை! பகுதி 6". கட்டுரை. ஆனந்த விகடன். பார்த்த நாள் 11 மே 2018.
  2. த.ராஜன் (2018 மே 10). "அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் லிஃப்கோ!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 11 மே 2018.