தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு
தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு | |
---|---|
இயக்கம் | லானா வச்சோவ்ஸ்கி |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு | ஜோசப் ஜெட் சாலி |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 18, 2021(சான் பிரான்சிஸ்கோ) திசம்பர் 22, 2021 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு (ஆங்கில மொழி: The Matrix Resurrections) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்சு மற்றும் வீனசு காஸ்டினா புரொடக்சன்சு ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2003 ஆம் ஆண்டு வெளியான தி மேட்ரிக்சு ரெவொலுஷன் என்ற படத்தின் தொடர்ச்சியான நான்காவது படம் ஆகும்.
இந்த திரைப்படத்தை லானா வச்சோவ்ஸ்கி[1] என்பவர் இயக்க, கீயானு ரீவ்ஸ்,[2] கேரி-அன்னே மோசு, யாஹ்யா அப்துல்-மதின் II, ஜெசிகா கேன்விக், ஜொனாதன் கிராஃப், நீல் பாட்ரிக் ஹாரிஸ்,[3] பிரியங்கா சோப்ரா,[4] கிறிஸ்டினா ரிச்சி மற்றும் ஜடா பிங்கெட் சிமித் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் தொடங்கியது, ஆனால் அடுத்த மாதம் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் நிறுத்தப்பட்டது. இயக்குனர் வச்சோவ்ஸ்கி இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு படத்தை முடிக்காமல் விட்டுவிடலாம் என்று கூறினார். ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அதை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2020 இல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது, மூன்று மாதங்களுக்குப் பிறகு முடிந்தது. தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு படம் சான் பிரான்சிஸ்கோவில் திசம்பர் 18, 2021 இல் வெளியாவுள்ளது. அத்துடன் திசம்பர் 22, 2021 இல் உலகளவில் வெளியாவுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Romano, Nick (September 14, 2021). "Lana Wachowski says bringing back Neo and Trinity for The Matrix 4 helped her grieve". Entertainment Weekly. செப்டம்பர் 15, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 1, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kroll, Justin (August 20, 2019). "'Matrix 4' Officially a Go With Keanu Reeves, Carrie-Anne Moss and Lana Wachowski". Variety. May 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 20, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Newby, Richard (September 9, 2021). "Everything We Know About The Matrix Resurrections So Far". Vulture (ஆங்கிலம்). September 9, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 9, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Matrix Resurrections: Priyanka Chopra As Sati All You Need To Know About The Film In 5 Points". NDTV.com. December 2, 2021 அன்று பார்க்கப்பட்டது.