தி சம்மர் ஆப் சங்கய்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி சம்மர் ஆப் சங்கய்லே
இயக்கம்ஆலன்டி கவைடி
தயாரிப்புŽivilė Gallego
Antoine Simkine
கதைAlantė Kavaitė
இசைJean-Benoît Dunckel
நடிப்புJulija Steponaityte
Aistė Diržiūtė
ஒளிப்பதிவுDominique Colin
படத்தொகுப்புJoëlle Hache
விநியோகம்Fralita Films
Les Films d'Antoine
Viking Film
வெளியீடு22 சனவரி 2015 (2015-01-22)(Sundance)
29 சூலை 2015 (France)
21 ஆகத்து 2015 (Lithuania)
ஓட்டம்88 நிமிடங்கள்
நாடுலிதுவேனியா
பிரான்சு
நெதர்லேண்ட்சு
மொழிஇலித்துவானிய மொழி

தி சம்மர் ஆப் சங்கய்லே என்பது (லிதுவேனியா மொழி: Sangailės vasara) லிதுவேனியா மொழி நாடகம் சார்ந்த திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் ஆலன்டி கவைடி. இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் பரந்த தோற்ற பிரிவில் திரையிடப்பட்டது.[1] 2015 ஆம் ஆண்டிற்கான சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்திற்குச் சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது.[2] அதேபோல் வெள்ளி கொக்கு விருது வரிசையில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (Julija Steponaityte), சிறந்த தொகுப்பு வடிவமைப்பு (Ramunas Rastauskas) ஆகியவற்றுக்கு விருது கிடைத்தது.[3] சிறந்த வெளிநாட்டு மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படம் பின்னர் 88வது அகாதமி விருதில் பரிந்துரைக்கப்படவில்லை. இப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டது.[4]

கதை[தொகு]

விமான சாகசங்களால் கவரப்பட்ட சன்காய்லே என்ற 17 வயது பெண் அவ்வளவாக விமானத்தில் பறக்கும் அளவு தைரியம் இல்லதவளாக இருக்கிறாள். அவள் கிராமத்திற்கு அருகில் கோடைவிழாவில் நடக்கும் விமான கண்காட்சியைக் காணச் செல்லும்போது அங்கே தன்னைப்போல் அல்லாமல் வித்தியாச குணம் கொண்ட பெண்ணான அவள் வயதே ஆன ஆஸ்டே என்பவளைச் சந்திக்கிறாள். ஆஸ்டேயின் வாழ்க்கை சுவாரச்சியங்கள் இவளிடம் தொற்றிக் கொள்கிறது. இருவரும் காதலர்களாக நெருக்கமாகிறார்கள். தன் பதின் பருவத்தே உள்ள விமான சாகசத்திற்குத் தோழியின் உறுதுணை கிட்டுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Panorama 65th Berlinale". Berlinale. பார்த்த நாள் 18 January 2015.
  2. Puig, 'Me & Earl wins top 2 Sundance awards' (1 February 2015). "Claudia". http://www.usatoday.com/story/life/movies/2015/02/01/sundance-competition-winners/22555707/. பார்த்த நாள்: 1 February 2015. 
  3. "35 Films That Could Become Foreign Language Oscar Submissions". பார்த்த நாள் 31 August 2015.
  4. சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 13.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை தி இந்து தமிழ் 13 சனவரி 2016