தில்லி இரும்புத் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி இரும்புத் தூண்

தில்லியில் அமைந்துள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண், பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்குச் சான்றாகும். 23 அடி 8 அங்குலம் (7.21 மீட்டர்) உயரமும், 16 அங்குலம் (41 செமீ) விட்டமும் கொண்ட இத்தூண், தற்போது தெற்கு தில்லியின் மெஹரொலி பகுதியில் உள்ள குதுப் மினார் வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தூண் முன்பு எங்கிருந்தது என்பதை யாரும் அறிகிலர்.[1] இத்தூணில் குப்தர் பிராமியில்[2] பொறிக்கப்பட்ட தகவலின் மூலம் விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது என அறிய முடிகின்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_இரும்புத்_தூண்&oldid=3452454" இலிருந்து மீள்விக்கப்பட்டது