உள்ளடக்கத்துக்குச் செல்

திலீப் ராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் ராயன்
பிறப்பு10 மே 1989 (1989-05-10) (அகவை 35)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
மற்ற பெயர்கள்திலீப்குமார்
பணிதொகுப்பாளர், தொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போது வரை

திலீப் ராயன் (10 மே 1989) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் நாயகி என்ற தொடரில் திருமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற தொலைக்காட்சி நடிகர் ஆனார்.[1]

தொலைக்காட்சி வாழ்க்கை

[தொகு]

இவர் 2013ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் இவருடன் நடிகை மற்றும் தொகுப்பாளினி நிஷா கிருஷ்ணன் என்பவர் இணைத்து தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சன் சிங்கர் என்ற பாட்டு நிகழ்ச்சியின் 5வது பருவத்தை தொகுப்பாளினி நட்சத்திராவுடன் இணைத்து தொகுத்து வழங்கினார்.

2018ஆம் ஆண்டில் நாயகி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இந்த தொடரில் திருமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பிரதீப்புக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

சின்னத்திரை

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2013-2016 சூரிய வணக்கம் தொகுப்பாளர் சன் தொலைக்காட்சி
2016-2017 சன் சிங்கர் 5 தொகுப்பாளர் சன் தொலைக்காட்சி
2018-2020 நாயகி திருமுருகன் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இயக்குநர் குமரன் சொன்னது அப்படியே நடந்துடுச்சு! - நெகிழும் `நாயகி' திலீப் ராயன்". cinema.vikatan.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_ராயன்&oldid=3146590" இலிருந்து மீள்விக்கப்பட்டது