திலீப்பு வர்மா
திலீப்பு வர்மா Dilip Varma | |
---|---|
பீகாரின் சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991 – பிப்ரவரி 2005 | |
தொகுதி | சிக்டா |
பதவியில் 2010–2015 | |
தொகுதி | சிக்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திலீப்பு குமார் வர்மா |
பிற அரசியல் தொடர்புகள் |
|
பெற்றோர் | அம்ரேசு பிரசாத்து வர்மா (தந்தை) |
கல்வி | மும்பை புனித சேவியர் கல்லூரி, 1974[1] |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
திலீப்பு வர்மா (Dilip Varma) இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [2] சிக்டா தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்காக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயேச்சையாகவும், [3] [1] பாரதிய சனதா கட்சி வேட்பாளராகவும், [4] [5] சமாச்வாதி கட்சி வேட்பாளராகவும், [6] காங்கிரசு கட்சி வேட்பாளர் மற்றும் கம்பரன் விகாசு கட்சி வேட்பாளர் என [7] சிக்தாவை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]வர்மா 1991 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள சிக்டா இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1995 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், 2000 மற்றும் பிப்ரவரி 2005 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவரது கட்சி விசுவாசம் மாறுபட்டது. ஆனாலும் வர்மா பல்வேறு கட்சிகளின் வேட்பாளராக நின்று போட்டியிட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Dilip Varma (Independent (IND)): Constituency - Sikta (Paschim Champaran) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ "Dilip Varma - Bihar Vidhan Sabha" (PDF). Archived from the original (PDF) on 2021-12-30.
- ↑ Chaudhary, Pranava Kumar (September 26, 2010). "The former MLA BJP leader Dilip Verma is likely to contest as an independent from Sikta assembly consttuency". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2021-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ "Dilip Varma (Bharatiya Janata Party (BJP)):Constituency- Sikta (West Champaran) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ "Dilip Kr Varma, Sikta Assembly Elections 2000: Bharatiya Janata Party". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ "Dilip Verma (Samajwadi Party (SP)):Constituency- Sikta (West Champaran) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ "Deelip Varma winner in Sikta, Bihar Assembly Elections 1995: Champaran Vikas Party". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.