திரேசின் தயோமிடிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெர்குலஸ் மற்றும் தியோமெடிஸ், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள பலாஸ்ஸோ வெச்சியோவில் 16 ஆம் நூற்றாண்டய சிலை; இது வின்சென்சோ டி ரோஸி உருவாக்கிய "தி லேபர்ஸ் ஆஃப் ஹெர்குலஸ்" என்பதைக் குறிக்கும் ஆறு பளிங்கு சிலைகளில் ஒன்று. [1]

திரேசின் மன்னர் தயோமிடிஸ் (Diomedes of Thrace, பண்டைய கிரேக்கம் : Διομήδης) என்பவர் எரெசு மற்றும் சிரேனே ஆகியோரின் மகன் ஆவார். [2] இவர் பிஸ்டோன்ஸ் போரைப் போன்ற பழங்குடியினரை ஆண்டுகொண்டு கருங்கடலின் கரையில் வாழ்ந்தார். [3] [4] இவர் மனிதரை உண்ணும் குதிரைகளை வளர்த்ததற்றாகப் பெயர் பெற்றவர். [5] ஹெராக்கிள்ஸ் தனது பன்னிரண்டு பணிகளில் எட்டாவது பணியாக முடித்தது, இவர் வளர்த்த அந்தக் குதிரைகளைப் பிடித்துச் சென்றது ஆகும். இந்த செயலின்போது தியோமெடிசைக் கொன்றார்.

தொன்மம்[தொகு]

ஹெராக்கிள்ஸ் தனது எட்டாவது பணியை முடிக்க மன்னர் தியோமெடிஸை எதிர்கொள்ளும் சூழல் உருவானது. டிரின்ஸின் மன்னரும், ஹெராக்லின் உறவினரான யூரிஸ்தியஸ் இட்ட ஏழாவது பணியான கிரேட்டன் காளையை பிடித்துவந்த பின்னர் திரேஸ் நாட்டுக் குதிரைகளைக் பிடித்துவர ஹெராக்கிள்ஸ் அனுப்பப்படுகிறார். இதற்காக மன்னர் தியோமெடிசை சந்திக்க ஹெராக்கிள்ஸ் கருங்கடலிலின் கரையில் பயணம் மேற்கொண்டார். அவர் கடவுளான ஏரிஸ் மற்றும் சிரீன் ஆகியோரின் மகன் என்று கூறப்படுகிறது. மன்னர் தியோமெடிஸ் கொடியவராக இருந்தார்; இவர் தான் வளர்த்த நான்கு குதிரைகளுக்கு அந்நியர்களையும், கைதிகளையும் உணவாக அளித்தார். இதனால் அவற்றிற்கு ஓட்ஸ் போன்ற தானியங்களின் சுவை பிடிக்காமல் போனது. அதற்கு பதிலாக அவற்றிற்கு மனித இறைச்சியால் விருந்து வைத்தார். இந்தச் செயலை அக்குதிரைகளின் உரிமையாளரான மன்னர் விருப்பத்துடன் செய்தார். அந்தக் குதிரைகள் கட்டுக்ககடங்காதவையாக இருந்தன; இந்த அரசனைப் போலவே காட்டுமிராண்டித்தனமாக இருந்தன. வழக்கமான கயிற்றால் அவற்றைக் கட்டிவைக்க முடியவில்லை; அதற்கு பதிலாக அவற்றை சங்கிலிகளால் பிணைத்து வெண்கல அகழிக்குள் வைத்து இருந்தார். இதனால் அவை தப்பிச் செல்லாமல் தடுத்து வைத்திருந்தார்.

அப்பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் வந்தவுடன், மன்னர் தியோமெடிஸ் அந்நியர்களை எவ்வாறு நடத்தினார் என்பதை அறிந்துகொண்டு, இவருடன் மற்போர் செய்கிறார். ஹெராக்கிள்ஸ் ஒப்பிடமுடியாத வலிமை கொண்டவர் என்று கூறப்பட்டாலும். இவரை வெல்வது ஹெராக்கிள்சுகு எளிதாக இல்லை. ஏனெனில் தியோமெடிஸ் போர்க் கடவுளின் மகன் ஆவார். இறுதியில் இவர் ஹெராக்கிள்ஸிடம் தோற்றார். இறுதியில் இவர் தாள் வளர்த்த குதிரைகளிடமே கொண்டுவந்து விடப்படுகிறார். அந்தக் குதிரைகளுக்கு மனித இறைச்சியை உண்டே பசியைப் போக்கி வந்துள்ளன என்று கூறப்படுகிறது. பசிவெறியோடு இருந்த அவற்றிற்கு அற்றின் எஜமானரின் இரத்தமே அவற்றின் வெறியைப் போக்குவதாக ஆனது என்று தெரிகிறது. இதன்பிறகு அவை அமைதியானதாகவும், கட்டுப்படுத்தக்கூடியதாகவும் மாறியன. யூரிஸ்டியஸ் இட்ட எட்டாவது பணியை முடித்துவிட்டதை அவரிடம் காட்ட ஹெராக்கிள்ஸ் குதிரைகளை டைரினுக்கு ஓட்டி வந்து அவரிடம் ஒப்படைக்கிறார். இதன் பிறகு யூரிதியஸ் அக்குதிரைகளை திருமணம், பெண்கள், பிரசவத்திற்காக தெய்வமான ஹேராவுக்கு அர்ப்பணிக்கிறார். அர்ப்பணிக்கப்பட்டவுடன் அவற்றை விடுவிக்கிறார். அவற்றின் சந்ததியினரில் ஒன்றே பேரரசர் அலெக்சாந்தரின் குதிரை என்று கூறப்படுகிறது. வேறு சில பதிப்புகளில் அக்குதிரைகள் ஒலிம்பஸ் மலைக்கு விரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவை காட்டு விலங்குகளால் வேட்டையாடப்பட்டன.

மரியாதை[தொகு]

அந்தாட்டிக்காவில் உள்ள டியோமெடிஸ் ஏரிக்கு தியோஸின் டியோமெடிஸ் என்று இவரை நினைவுபடுத்தும் விதமாக பெயரிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேசின்_தயோமிடிஸ்&oldid=3583059" இருந்து மீள்விக்கப்பட்டது