உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேட்டன் காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேட்டன் காளை
கிரெட்டன் காளையைப் பிடிக்கும் ஹெராக்கிள்ஸ். லாரியா (எசுப்பானியா) இலிருந்து எடுக்கபட்ட ஒரு ரோமானிய மொசைக் கல்லில் செய்யப்பட்ட வேலைப்பாடு.
குழுபழங்கதை உயிரினம்
ஒத்த உயிரினம்மினோட்டூர்
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுகிரேக்கம்
பிரதேசம்கிரீட்

கிரேக்க தொன்மங்களில், கிரேட்டன் காளை ( கிரேக்கம்: Κρὴς ταῦρος ) என குறிப்பிடப்படும் காளையானது தொன்மங்களில் குறிப்பிடப்படும் காளை ஆகும்.

கிரெட்டன் காளையை தரையில் அழுத்தி அடக்கி ஹெராக்கிள்ஸ் தனது பணிகளில் ஒன்றைச் செய்கிறார். இந்த ஓவியம் பி. பிகார்ட்டால் 1731 இல் உருவாக்கப்பட்டது.

தொன்மம்

[தொகு]

பின்னணி

[தொகு]

கிரீட்டின் மன்னராக மினோஸ் இருந்தார். தனது சகோதரர்களிடமிருந்து தான் ஆட்சி செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த விரும்பினார். அதற்காக சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதினார். சமுத்திர ராஜனான போசைடனைத் தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு வெள்ளை காளையை தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவர் பிரார்த்தனை செய்தார். காளை கடவுளுக்கு பலியிடப்படும் என்ற புரிதலுடன் பொசைடன் மினோசுக்கு காளையை அனுப்பினார். அத்தகைய சிறந்த காளையை அதற்கு முன் மினோஸ் மன்னன் கண்டதேயில்லை. ஆகவே, அவன் அதைப் பலியிட விரும்பாமல், அதைத் தன் மந்தைகளில் சேர்த்துவிட்டு, சியசுக்குச் சாதாரனமான ஒரு காளையைப் பலியிட ஏற்பாடு செய்தார். இதனால் பொசைடன் கோபமடைந்தார். மினோஸின் மனைவி பாசிபாசுக்கு காளை மீது காதல் கொள்ளவைத்தார். இது அவள் அவர் அரை மனிதன், அரை காளையான, மினோட்டாரைப் பெற்றெடுப்பதில் முடிந்தது. பொசைடன் இந்த வெள்ளைக் காளைக்கு வெறி பிடிக்கும்படி சபித்துவிட்டார். [1]

டெல்பியில் ஆரக்கிள் கலந்தாலோசித்தபின், மன்னன் மினோஸ் மினோட்டாரை வைத்திருக்க டெட்டாடலசைக் கொண்டு சிக்கல் வழி கொண்ட இடத்தைக் கட்டினார். [2]

ஹெராக்கிள்சின் ஏழாவது பணி

[தொகு]

தனது ஏழாவது பணியாக யூரிஸ்டீயசால் காளையைப் பிடிக்க ஹெராக்கிள்ஸ் அனுப்பப்பட்டார். இதற்காக ஹெராக்கிள்ஸ் கிரீட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். வெறிபிடித்த அந்தக் காளை விளைநிலங்களில் புகுந்து, பயிர்பச்சைகளையெல்லாம் பாழாக்கி கிரீட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் காளையை பிடித்துச் செல்லவந்த ஹெராகிள்சுக்கு மன்னர் மினோஸ் அனுமதி அளித்தார். [3] இதன் பின் ஹெராக்கிள்ஸ் காளையை அடக்கிப் பிடித்த பின்னர் அதை டிரின்ஸில் உள்ள யூரிஸ்டியசிடம் அனுப்பினார். வெறி தணிந்த காளை பின்னர் மராத்தானில் அலைந்து, "மராத்தோனியன் காளை" என்று அறியப்பட்டது. அடுத்தததாக மனிதனை உண்ணும் மாரெஸ் ஆஃப் டியோமெடிஸை (அடுத்த பணி) பிடித்துக் கொண்டுவரும் பணிக்காக யூரிஸ்டியஸ் ஹெராக்லஸை அனுப்பினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. [htt 2&dq=cretan+bull&hl=en&sa=X&ved=0ahUKEwjyprjoit_KAhVJUJAKHY5hBkE4ChDoAQgbMAA#v=onepage&q=cretan%20bull&f=false Buenger, Theodore Arthur. Crete in the Greek Tradition, University of Pennsylvania, 1915]
  2. "The Cretan Bull", The Perseus Project, (Gregory R. Crane, ed.), Tufts University
  3. Pseudo-Apollodorus, Bibliotheca 2.5.7

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேட்டன்_காளை&oldid=3067695" இலிருந்து மீள்விக்கப்பட்டது