திருவிழா ஜெயசங்கர்
Appearance
திருவிழா ஜெயசங்கர் (பிறப்பு: சனவரி 31, 1937) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஜெயசங்கர் ஆரம்பத்தில் தனது தாத்தா திருவிழா சங்கு பணிக்கரிடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தனது தந்தை திருவிழா ராகவ பணிக்கரிடம் பயிற்சி மேற்கொண்டு, அவருடன் இணைந்து மத்திய திருவாங்கூரின் கோயில்களில் நாதசுவரம் இசையினை வழங்கினார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றன. வெட்டிக்காவலா சசிகுமார், கரிப்பத் முருகதாஸ் ஆகியோர் ஜெயசங்கரின் குறிப்பிடத்தக்க மாணாக்கர் ஆவர்.
பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்
[தொகு]- இசைப்பேரறிஞர் விருது, 1997. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Inimitable idiom
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
உசாத்துணை
[தொகு]- THIRUVIZHA JAYASANKAR பரணிடப்பட்டது 2014-04-29 at the வந்தவழி இயந்திரம்