திருவாழிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாழிக்கல் என்பது வைணவக் கோயில்களுக்கு இறையிலியாக தரப்பட்ட நிலங்களின் எல்லையை வரையறுக்கும் கல்லாகும்.[1] இந்தக் கல்லில் திருமாலின் அடையாளமான சக்கரம் செதுக்கப்பட்டிருக்கும். இக்கல்வெட்டில் சக்கரம் பொறிக்கப்பட்டிருப்பதால் இதனை சக்கரக்கல் என்பர்.[2]

காணப்படும் இடங்கள்[தொகு]

  • முசிறி அருகே மண்பறை கிராமத்தில் ஐந்து அடி உயரமுள்ள திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது.[3]
  • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் தெப்பக் குளத்துக்கு அருகே நான்கு அடி உயரமுள்ள திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. [4] இக்கல்வெட்டு மேல் பகுதி வளைந்து சிகர அமைப்பினை உடையது. இக்கல்லில் திருமாலின் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சக்கரம் எட்டு ஆரங்கள் உடையது.
  • காளையார்கோயில் - [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. முசிறி அருகே மண்பறையில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு - தினகரன் நாளிதழ் - ஜனவரி 27, 2019
  2. சக்கரக்கல்
  3. "Musiri, tiruvalikkal - முசிறி அருகே மண்பறையில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு - Dinakaran". m.dinakaran.com.
  4. "350 ஆண்டு பழமையான சேதுபதி மன்னரின் திருவாழிக்கல் : ராமநாதபுரம் அருகே ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்". இந்து தமிழ் திசை.
  5. காளையார்கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுப்பு

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாழிக்கல்&oldid=3827849" இலிருந்து மீள்விக்கப்பட்டது