இறையிலி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இறையிலி என்னும் சொல் தமிழ்க் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படும் சொற்களில் ஒன்று. போர்வீரர், புலவர் முதலானோரைப் பாராட்டி அரசன் தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தை வழங்குவது உண்டு. அப்போது அது முற்றுட்டாகவோ இறையிலியாகவோ வழங்கப்படும். இறையிலி என்றால் நிலம் பெற்றவர் அந்த நிலத்துக்கு வரி செலுத்தவேண்டியது இல்லை. நிலம் அவருக்கு உடைமை அன்று. அந்த நிலத்தை அவர் விற்கவோ, ஒற்றிக்கு வைக்கவோ இயலாது. பயிர் செய்து பலனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கோயில்களின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட நிலங்கள் , பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் (பிரம்மதேயம்) ஆகியனவும் இவ்வகையில் ( வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட ) அடங்கும்.