திருவான்மியூர் வால்மீகி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவான்மியூர் வால்மீகி கோவில்
பெயர்
பெயர்:வால்மீகி கோவில்
அமைவிடம்
அமைவு:திருவான்மியூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:வால்மீகி

வால்மீகி கோவில் (Valmiki temple) தமிழ்நாடு, சென்னையின் ஒரு பகுதியான திருவான்மியூரில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். இது இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கான கோவில். சிறு மண்டபம் போலமைந்துள்ள இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது.[1]

அமைவிடமும் நிர்வாகமும்[தொகு]

வால்மீகி கோவில் திருவான்மியூரின் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.[1] அதே தெருவின் மறுபுறம் இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் உள்ளது. மருந்தீசுவரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் கண்காணிக்கப்படுகிறது.[1]

சிறப்பு[தொகு]

சிறு மண்டபம் போலமைந்துள்ள இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது.[1] வால்மீகி முனிவரின் பெயரால் இப்பகுதி திருவான்மியூர் எனப் பெயர் பெற்றது. மருந்தீசுவரர் கோவிலுக்கு அருகிலுள்ள திருவான்மியூரின் ஒரு பகுதி வால்மீகி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி கடற்கரை வழியே பயணப்பட்ட வால்மீகி இவ்விடத்தில் ஓய்வெடுத்ததாக மரபுவழிச் செய்தி நிலவுகிறது.

சிக்கலும் தீர்வும்[தொகு]

கிழக்குக் கடற்கரையில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் சாலையின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால் ஒரு சமயம் சாலை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் அகற்றப்படும் சிக்கலுக்கு உள்ளானது. ஆனால் கோவில் நிர்வாகிகளின் முயற்சியால் அது தடுக்கப்பட்டு, இப்போது இக்கோயில் சாலையைப் இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒருவழிப்படுத்தும் இடைப்பிரிப்பாக போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி உதவும்விதத்தில் நிலைப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "THIRUVANMIYUR: A temple for Valmiki". {{cite web}}: Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)

வெளியிணைப்புகள்[தொகு]