திருவனந்தபுரம் மெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவனந்தபுரம்/சென்னை அதிவிரைவு மெயில்
கண்ணோட்டம்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, கேரளா
நடத்துனர்(கள்)தெற்கு ரயில்வே மண்டலம்
வழி
தொடக்கம்திருவனந்தபுரம் சென்ட்ரல்/சென்னை சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்18
முடிவுசென்னை சென்ட்ரல்/திருவனந்தபுரம் சென்ட்ரல்
ஓடும் தூரம்909 km (565 mi)
சராசரி பயண நேரம்திருவனந்தபுரம் நோக்கி 16 மணி நேரமும், சென்னையை நோக்கி 16 மணி 40 நிமிடங்களும்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12623 / 12624
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன வசதிகொண்ட முதல் வகுப்பு, குளிர்சாதன வசதிகொண்ட இரண்டடுக்கு, குளிர்சாதன வசதிகொண்ட மூன்றடுக்கு, படுக்கை வகுப்பு, பொதுவகுப்பு
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிCouchette car
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்உள்ளது
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25 kV AC 50 Hz
வேகம்60 kilometres per hour (37 mph)


திருவனந்தபுரம் மெயில் (Thiruvananthapuram Mail) நாள்தோறும் இயக்கப்படும் ஒரு அதிவிரைவு தொடருந்துசேவையாகும். இது கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கும் இடையில் இயக்கப்படுகிறது. [1] இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் தெற்கு ரயில்வேயின் முக்கியத் தொடருந்து சேவைகளுள் திருவனந்தபுரம் மெயிலும் ஒன்று. இது கோட்டயம் வழியே செயல்படுகிறது. இது இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களை (திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர், கோயம்புத்தூர் மற்றும் சென்னை) இணைக்கிறது.

வரலாறு[தொகு]

திருவனந்தபுரம் மெயில் 1940 ஆம் ஆண்டு 19/20 என்ற வண்டி எண்ணுடன் சென்னை-கொச்சி துறைமுக முனையம் விரைவுவண்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சென்னைக்கும் கொச்சி துறைமுகத்துக்கும் இடையே செயல்பட்டு, பின்னர் சென்னை – கொச்சி துறைமுகம் மெயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டது. 1961 ஆம் ஆண்டு இந்த ரயில்சேவைக்கு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையம் வரை கோட்டயம் வழியிலான தொடருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டது.

முக்கிய நிறுத்தங்கள்[தொகு]

 1. திருவனந்தபுரம்
 2. கொல்லம்
 3. காயங்குளம்
 4. மாவேலிக்கரை
 5. செங்கன்னூர்
 6. சங்கனாச்சேரி
 7. கோட்டயம்
 8. எர்ணாகுளம்
 9. ஆலுவா
 10. திருச்சூர்
 11. பாலக்காடு
 12. கோயம்பத்தூர்
 13. ஈரோடு
 14. சேலம்
 15. காட்பாடி
 16. சென்னை சென்ட்ரல்

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

[2]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம்

கடந்த

தொலைவு

நாள் பாதை
1 சென்னை

சென்ட்ரல் (MAS)

தொடக்கம் 19:45 0 0 கி.மீ 1 1
2 காட்பாடி

சந்திப்பு (KPD)

21:28 21:30 2 நிமி 130 கி.மீ 1 1
3 சேலம்

சந்திப்பு (SA)

00:07 00:10 3 நிமி 334 கி.மீ 2 1
4 ஈரோடு

சந்திப்பு (ED)

01:05 01:10 5 நிமி 396 கி.மீ 2 1
5 கோயம்பத்தூர்

சந்திப்பு (CBE)

02:45 02:50 5 நிமி 497 கி.மீ 2 1
6 பாலக்காடு

(PGT)

04:10 04:15 5 நிமி 551 கி.மீ 2 1
7 திருச்சூர்

(TCR)

05:18 05:21 3 நிமி 628 கி.மீ 2 1
8 அங்கமாலி

(AFK)

06:03 06:05 2 நிமி 674 கி.மீ 2 1
9 ஆலுவா

(AWY)

06:15 06:17 2 நிமி 683 கி.மீ 2 1
10 எர்ணாகுளம்

நகரம் (ERN)

06:50 06:55 5 நிமி 700 கி.மீ 2 1
11 திருப்பூணித்துறை

(TRTR)

07:08 07:10 2 நிமி 712 கி.மீ 2 1
12 கோட்டயம்

(KTYM)

07:55 08:00 5 நிமி 762 கி.மீ 2 1
13 சங்கனாச்சேரி

(CGY)

08:18 08:20 2 நிமி 780 கி.மீ 2 1
14 திருவல்லா

(TRVL)

08:28 08:30 2 நிமி 788 கி.மீ 2 1
15 செங்கன்னூர்

(CNGR)

08:38 08:40 2 நிமி 797 கி.மீ 2 1
16 மாவேலிக்கரை

(MVLK)

08:51 08:53 2 நிமி 809 கி.மீ 2 1
17 காயங்குளம்

சந்திப்பு (KYJ)

09:03 09:05 2 நிமி 817 கி.மீ 2 1
18 கொல்லம்

சந்திப்பு (QLN)

09:55 10:00 5 நிமி 858 கி.மீ 2 1
19 வர்க்கலை

(VAK)

10:20 10:22 2 நிமி 881 கி.மீ 2 1
20 திருவனந்தபுரம்

(TVP)

10:58 11:00 2 நிமி 920 கி.மீ 2 1
21 திருவனந்தபுரம்

சென்ட்ரல் (TVC)

11:45 முடிவு 0 922 கி.மீ 2 1

பிரபலமான கலாச்சாரம்[தொகு]

திரைப்படம்[தொகு]

நம்பர்.20 மெட்ராஸ் மெயில் என்ற மலையாளத் திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவனந்தபுரம் மெயிலில் எடுக்கப்பட்டவை.

பெட்டிகள்[தொகு]

24 ரயில் பெட்டிகளைக் கொண்டு திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் செயல்படுகிறது. இதன் அமைப்பு முறை பின்வருமாறு:

L – SLR – GEN –GEN - S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – B4 – B3 – B2 – B1 – A2 – A1 – HA1 – GEN - SLR

வேகம்[தொகு]

சுமார் 16 மணி நேரத்தினை பயண நேரமாகக் கொண்டுள்ள திருவனந்தபுரம் மெயிலானது 919 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இதில் சரக்கு சம்பந்தப்பட்ட வசதிகள் இல்லை, ஆனால் உணவு வழங்கும் வசதிகள் உள்ளன. இதேபோல் திரும்பி வரும்போது பயண நேரம் 16 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களைக் கொண்டுள்ளது. இதற்கு காரணம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செயல்படும்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்பட்டு 919 கிலோ மீட்டரை அடைவதே ஆகும். [3] [4]

குறிப்புகள்[தொகு]

 1. "Southern Railway". sr. indian railways.
 2. "Trivandrum Mail (12623)". cleartrip.com.
 3. "Train Time Table". india rail info.
 4. "Train Time Table". india rail info.