திருமண ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமண ஒப்பந்தம் (Marriage Treaty) அல்லது ஆங்கிலேயே-போர்த்துக்கீசிய ஒப்பந்தம் (Anglo-Portuguese Treaty) என்பது 1861ஆம் ஆண்டில் இங்கிலாந்து முடியாட்சிக்கும் , போர்த்துக்கலுக்கும் இடையே ஏற்பட்ட செயலுறவு உடன்பாடு ஆகும். இது போர்த்துகலின் நான்காம் ஜான் மன்னரின் மகள் காத்தரினுக்கும், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கும் இடையே திருமணத்திற்கும் வழிகோலியது. இந்த உடன்படிக்கை ஆங்கிலேய போர்த்துக்கீசியர்களின் செயலுறவினை தங்கள் நாடுகளுக்கிடையே மரபுவழியாக புதுப்பித்துக் கொண்டு வந்தது.

பிரஸ்ஸல்சின் உடன்படிக்கை[தொகு]

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் அரசதிகாரம் சார்லசிற்கு மீண்டும் அளிக்கப்பட்டதை அடுத்து, சார்லசின் மனைவியாக தம்மவரில் ஒருவரை ஆக்க போர்த்துகலும், எசுப்பானியாவும் போட்டியிட்டன. பிரசல்சின் உடன்படிக்கை மூலம் சார்லஸ் முன்னரே எசுப்பானியாவுடன் உடன்பாடு வைத்திருந்த போதிலும் மாட்ரிட் உடனான அவரது உறவுகள் கடும் சிரமத்திற்காளானது. ஆங்கிலேயக் குடியரசு, குறிப்பாக ஜமேக்காவில் இருந்து கைப்பற்றிய உடைமைகளை திருப்பித்தர வேண்டி எசுப்பானியா வற்புறுத்தியது. சார்லசு இதற்கு உடன்படும் நிலையில் இருந்தார்.

செல்வாக்குள்ள ஆங்கிலேயே அதிகாரி எட்வர்டு ஹைட் மற்றும் அவரது அயர்லாந்து ஆதரவாளரான ஆமோண்டி ஆகியோரின் வலுவான ஆதரவை போர்த்துக்கீசியர்கள் பெற்றனர். அதே போல காத்தரினின் சீதனமான பணமும், பம்பாய் மற்றும் டாங்கீர் குடியேற்றப் பகுதிகளும் சேர்த்துக் கொண்டது. காலப்போக்கில் இவைகள் யாவும் பொறுப்புகளாக கருதப்பட்டது. சார்லசு, மும்பாயை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியிடம் விற்றார். 1684ஆம் ஆண்டுக்குள் மூரிஷ் படைகள் வெளியேறும் வரை டாங்கீர் பராமாரிக்கப்பட்டது. ஆனால் மூரிஷ் படைகள் சுற்றியிருந்தும் தொடர்ந்து அழுத்தத்திற்குள்ளானது. மேலும் இது இங்கிலாந்தின் அரசியல் சர்ச்சை ஏற்பட மூலகாரணமாயிருந்தது. விக்ஸ் கருத்தின்படி அதிக அயர்லாந்து கத்தோலிக்கர்களாக இருந்த காவல்படையினரை, பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்து முழுமையான மன்னராட்சியைத் திணிப்பதற்கு வடிவமைக்கப்பட்டது.[1]

இந்த உடன்படிக்கையின்படி, பிரடெரிக் சோம்பர்க்கின் தலைமையிலான பிரித்தானிய, அயர்லாந்துப் படைகள் எசுப்பானியாவுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த போர்த்துகலின் விடுதலைப்போரில் சேவை செய்ய அனுப்பப்பட்டது. 1668ல் போர்ச்சுக்கல் தனது சுதந்திரத்தை வெற்றிகரமாக காப்பாற்றியது.

சார்லஸ் மற்றும் காத்தரினுக்கு குழந்தைபேறு இல்லாததனால் 1685ஆம் ஆண்டில் அரசு அதிகாரத்தை மன்னரின் சகோதரர் யோர்க் இளவரசர் யேம்சு பெற்றார்.

சான்றுகள்[தொகு]

  1. Childs p.115-51

நூற்பட்டியல்கள்[தொகு]

Childs, John. Army of Charles II. Routledge, 2013

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_ஒப்பந்தம்&oldid=2386189" இலிருந்து மீள்விக்கப்பட்டது