திருமணப் பொருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த பன்னிரென்டு பொருத்தங்களும், அவை தொடர்பான வழக்கங்களும் பின்வருமாறு.

தினப் பொருத்தம்[தொகு]

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆணுடைய நட்சத்திரம் வரை எண்ணி கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

கணப் பொருத்தம்[தொகு]

தேவ கணம்[தொகு]

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்[தொகு]

பரணி, ரோகிணி, திருவாதிரை பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்[தொகு]

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பொருத்த விபரம்[தொகு]

 • பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
 • பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
 • பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
 • பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
 • பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

மகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)[தொகு]

பெண் நட்சத்திரம் முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)[தொகு]

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)[தொகு]

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது. இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

 • அசுவினி - ஆண் குதிரை
 • பரணி - ஆண் யானை
 • கார்த்திகை - பெண் ஆடு
 • ரோகிணி - ஆண் நாகம்
 • மிருகசீரிஷம் - பெண் சாரை
 • திருவாதிரை - ஆண் நாய்
 • புனர்பூசம் - பெண் பூனை
 • பூசம் - ஆண் ஆடு
 • ஆயில்யம் - ஆண் பூனை
 • மகம் - ஆண் எலி
 • பூரம் - பெண் எலி
 • உத்திரம்- எருது
 • அஸ்தம் - பெண் எருமை
 • சித்திரை - ஆண் புலி
 • சுவாதி - ஆண் எருமை
 • விசாகம் - பெண் புலி
 • அனுஷம் - பெண் மான்
 • கேட்டை - கலைமான்
 • மூலம் - பெண் நாய்
 • பூராடம் - ஆண் குரங்கு
 • உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
 • திருவோணம் - பெண் குரங்கு
 • அவிட்டம் - பெண் சிங்கம்
 • சதயம் - பெண் குதிரை
 • பூரட்டாதி - ஆண் சிங்கம்
 • உத்திரட்டாதி - பாற்பசு
 • ரேவதி - பெண் யானை

- இவற்றில்

 • பாம்பு x கீரி
 • யானை x சிங்கம்
 • குரங்கு x ஆடு
 • மான் x நாய்
 • எலி x பூனை
 • குதிரை x எருமை
 • பசு x புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

ராசிப் பொருத்தம்[தொகு]

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

 • 6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
 • 8-வது ராசி ஆகாது.
 • 7-வது ராசியானால் சுபம்.
 • அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
 • 1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
 • பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்[தொகு]

பெண் ராசி பிள்ளை ராசி
 • மேஷம்
 • தனுசு
 • துலாம்
 • கும்பம்
 • சிம்மம்
 • மிதுனம்
 • கன்னி
 • ரிஷபம்
 • மீனம்
 • கடகம்
 • மகரம்
 • விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

ராசி அதிபதி[தொகு]

இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

கிரகம் நட்பு சமம் பகை
 • சூரியன்
 • சந்திரன்
 • செவ்வாய்
 • புதன்
 • குரு
 • சுக்கிரன்
 • சனி
 • ராகு, கேது
 • சந்திரன், செவ்வாய், குரு
 • சூரியன், புதன்
 • சூரியன், சந்திரன், குரு
 • சூரியன், சுக்கிரன்
 • சூரியன், சந்திரன், செவ்வாய்
 • புதன், சனி, ராகு, கேது
 • புதன், சுக்கிரன், ராகு, கேது
 • சனி, சுக்கிரன்
 • புதன்
 • செவ்வாய், குரு, சுக்கிரன், சனி
 • சுக்கிரன், சனி
 • செவ்வாய், குரு, சனி, ராகு, கேது
 1. சனி, ராகு, கேது
 2. செவ்வாய், குரு
 3. குரு
 4. புதன், குரு
 1. சுக்கிரன், சனி, ராகு, கேது
 2. ராகு, கேது
 3. புதன், ராகு, கேது
 4. சந்திரன்
 5. புதன், சுக்கிரன்
 6. சூரியன், சந்திரன்
 7. சூரியன், சந்திரன், செவ்வாய்
 8. சூரியன், சந்திரன், செவ்வாய்
 • ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
 • ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
 • ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
 • ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
 • இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

வசியப் பொருத்தம்[தொகு]

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.

பெண் ராசி பிள்ளை ராசி
 • மேஷம்
 • ரிஷபம்
 • மிதுனம்
 • கடகம்
 • சிம்மம்
 • கன்னி
 • துலாம்
 • விருச்சிகம்
 • தனுசு
 • மகரம்
 • கும்பம்
 • மீனம்
 • சிம்மம், விருச்சிகம்
 • கடகம், துலாம்
 • கன்னி
 • விருச்சிகம், தனுசு
 • மகரம்
 • ரிஷபம், மீனம்
 • மகரம்
 • கடகம், கன்னி
 • மீனம்
 • கும்பம்
 • மீனம்
 • மகரம்
 • வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

இரச்சுப் பொருத்தம்[தொகு]

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது. இரச்சு ஐந்து வகைப்படும்.

சிரோரச்சு[தொகு]

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரச்சு[தொகு]

 • ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்
 • திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதாரரச்சு[தொகு]

 • கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்
 • புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊருரச்சு[தொகு]

 • பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்
 • பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாதரச்சு[தொகு]

 • அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்
 • ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பொருத்த விபரம்[தொகு]

இரச்சுப் பொருத்தம் பார்ப்பதில் இரு வகைகள் உண்டு, இவற்றில் ஏதேனும் ஒரு வகை இருந்தால் போதும் பொருத்தம் உண்டு.

 • வகை 1: பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.
 • வகை 2: ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.

வேதைப் பொருத்தம்[தொகு]

தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

 • அசுவினி - கேட்டை
 • பரணி - அனுஷம்
 • கார்த்திகை - விசாகம்
 • ரோகிணி - சுவாதி
 • திருவாதிரை - திருவோணம்
 • புனர் பூசம் - உத்ராடம்
 • பூசம் - பூராடம்
 • ஆயில்யம் - மூலம்
 • மகம் - ரேவதி
 • பூரம் - உத்ரட்டாதி
 • உத்திரம் - உத்ரட்டாதி
 • அஸ்தம் - சதயம்

நாடிப் பொருத்தம்[தொகு]

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி[தொகு]

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி[தொகு]

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி[தொகு]

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

குறிப்பு[தொகு]

 • ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

விருக்ஷம்[தொகு]

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இருப்பது[தொகு]

 • கார்த்திகை - அத்தி
 • ரோகிணி - நாவல்
 • பூசம் - அரசு
 • ஆயில்யம் - புன்னை
 • மகம் - ஆல்
 • பூரம் - பலா
 • உத்தரம் - அலரி
 • அஸ்தம் - வேலம்
 • கேட்டை - பிராய்
 • மூலம் - மா
 • பூராடம் - வஞ்சி
 • உத்ராடம் - பலா
 • திருவோணம் - எருக்கு
 • பூரட்டாதி - தேமா
 • ரேவதி -இலுப்பை

பால் இல்லாதது[தொகு]

 • அசுவினி - எட்டி
 • பரணி - நெல்லி
 • மிருகசீரிஷம் - கருங்காலி
 • திருவாதிரை - செங்கருங்காலி
 • புனர்பூசம் - மூங்கில்
 • சித்திரை - வில்வம்
 • சுவாதி - மருதம்
 • விசாகம் - விளா
 • அனுஷம் - மகிழ்
 • அவிட்டம் - வன்னி
 • சதயம் - கடம்பு
 • உத்ரட்டாதி - வேம்பு

குறிப்பு[தொகு]

 • பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.

பொருத்தம்[தொகு]

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, இரச்சு ஆகியவை இருந்தால் பொதுவாக திருமணங்கள் நிகழுகின்றன.

 • இந்த 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

தூத்துக்குடி பாலு எழுதிய "திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?" கட்டுரை பரணிடப்பட்டது 2011-03-18 at the வந்தவழி இயந்திரம்

திருமணப் பொருத்தம் | Thirumana Porutham பரணிடப்பட்டது 2022-03-16 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணப்_பொருத்தம்&oldid=3585481" இலிருந்து மீள்விக்கப்பட்டது