உள்ளடக்கத்துக்குச் செல்

திருமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமகன்
இயக்கம்இரத்னகுமார்
கதைஇரத்னகுமார்
இசைதேவா
நடிப்புஎஸ். ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா, கார்த்திகா
வெளியீடு9 மார்ச் 2007 (2007-03-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

திருமகன் 2007-ஆம் ஆண்டு இரத்னகுமார் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா, கார்த்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் முழுக்க திருநெல்வேலியில் எடுக்கப்பட்டது. தந்தை மகனுக்கான உறவை விளக்கும் படமாக அமைந்தது.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]
நடிகர்கள்
கதாபாத்திரம்
எஸ். ஜே. சூர்யா தங்கபாண்டியன்
மீரா ஜாஸ்மின் ஐயக்கா
மாளவிகா மைனா
பிரீத்தி வர்மா
கார்த்திகா
மணிவண்ணன்
சார்லி

தயாரிப்பு

[தொகு]

2005-ஆம் ஆண்டு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது.[4] மீராவும் சூரியாவும் இணைவதாக வதந்தி வெளியானது,[5] சூரியா இதை மறுத்திருந்தார்.[6] இத்திரைப்படத்தின் பதிவின் போது சூரியாவிற்கும், இரத்தினகுமாருக்கும் கருத்துவேற்றுமை ஏற்பட்டது, மேலும் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர்.[7]

பாடல்கள்

[தொகு]

விமர்சனம்

[தொகு]

பிலிமிபீட் வலைதளம் கொடுத்த விமர்சனத்தில் "ஜாலியாக ஆரம்பித்து ரகளையாக போகும் படம் முடியும்போது கண்களில் குளம் கட்டி வைத்து, கைக்குட்டையால் ஒற்ற வைத்து விடுகிறது. அருமையான மகன்!" என்று எழுதினர்.[8] வெப்துனியா வலைதளத்தில் எழுதிய விமர்சனத்தில் "ஒவ்வொரு காட்சியையும் கலகலப்பாக தனித்தனியே ரசிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் ஒட்டுமொத்த படத்துக்கான வேகத்துக்கு கட்டுமானம் சரியில்லாத கட்டடம் போல கலகலத்து பலவீனமாகத் தெரிகிறது படம். இந்தக் குறையைச் சரிசெய்திருந்தால் திருமகன் மனதைக் கவர்ந்த ஒருமகன் ஆகியிருப்பான்." என்று குறிப்பிட்டனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://behindwoods.com/tamil-movie-articles/movies-05/thirumagan-review.html
  2. http://www.indiaglitz.com/channels/tamil/review/8534.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-10-20.
  4. http://www.behindwoods.com/News/9-5-05/sj_surya.htm
  5. http://www.behindwoods.com/tamil-movie-news/nov-06-04/22-11-06-sj-surya.html
  6. http://www.behindwoods.com/tamil-movie-news/nov-06-03/17-11-06-sj-surya.html
  7. http://cinema.maalaimalar.com/2013/10/30231749/thaanu-cinema-history.html
  8. Staff (2007-03-12). "திருமகன் - பட விமர்சனம்". tamil.filmibeat. Retrieved 2025-05-24.
  9. Webdunia. "திருமகன் - விமர்சனம்". Webdunia. Retrieved 2025-05-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமகன்&oldid=4280083" இலிருந்து மீள்விக்கப்பட்டது