திருப்பூணித்துறை கதகளி கேந்திர பெண்கள் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருப்பூணித்துறை கதகளி கேந்திர பெண்கள் குழுவிற்கு [1] நாரி சக்தி விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. [2]

திருபூணித்துறை கதகளி கேந்திரம் பெண்கள் குழு (Tripunithura Kathakali Kendram Ladies Troupe) என்பது ஆண்கள் மட்டுமே ஆடிவந்த கதகளியின் 300 வருட பாரம்பரியத்தை மீறி 1975ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாளில் நாரி சக்தி விருதுடன் இந்தக் குழு கௌரவிக்கப்பட்டது.

பின்னணி[தொகு]

கதகளி நடனம் என்பது ஒரு உன்னதமான இந்திய நடன வடிவமாகும். இது பாரம்பரியமாக ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வந்தது. நடனக் கலைஞர்கள் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க முகமூடிகளைப் பயன்படுத்துவார்கள். முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன. முந்நூறு ஆண்டுகளாக இது ஒரு குறிப்பிட்ட உயர் சாதியைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் சாதி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்படும் வரை மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை. 1946க்குப் பிறகு, சிறுவர்கள் இந்நடனத்தை கற்க இதற்கென இருக்கும் கல்விக்கூடங்களில் சேர முடிந்தது. ஆனால் சிறுமிகளுக்கான ஒரே வழி தனியே பயிற்சியினை மேற்கொள்வது ஒன்றுதான் வழையாக இருந்தது. [3]

திருப்பூணித்துறை கதகளி கேந்திரம் பெண்கள் குழு[தொகு]

ஒரு கதகளி கலைஞர்

திருப்பூணித்துறை கதகளி கேந்திரம் பெண்கள் குழு 1975இல் கேரளாவின் திருப்பூணித்துறையில் உருவாக்கப்பட்டது. [4] இது 1962ஆம் ஆண்டில் திரிச்சூரில் 1968 வரை மட்டுமே நீடித்திருந்த 'நாதநிகேதன்' என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் குழு அல்ல. இக்குழுவில் ஈடுபட்ட பெண்கள் மற்ற நடன வடிவங்களைக் கற்றுக்கொள்வதையேக் கருத்தில் கொண்டனர். கதகளியை கற்பது என்பது மிகவும் கடினம் என்று இவர்கள் நம்பினர். சவறை பாருகுட்டி அம்மா செய்ததைப் போல இவர்கள் ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து தோன்றியிருக்கலாம். ஆனால் இவர்கள் கிசுகிசுக்களுக்கும் குடிபோதையில் ஆண்களின் சீண்டல்களுக்கும் அஞ்சினர். எனவே இவர்கள் பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு குழுவை உருவாக்க விரும்பினர். மிகவும் புகழ்பெற்ற கதகளி கலைஞர்களில் ஒருவரான கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் உள்ளிட்ட முன்னணி நிபுணர்களால் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. [5] ஒரு குழு எட்டு மாதங்கள் கதகளியை படித்தது. [6]

"பெண்களுக்கான அதிகாரம் அளிக்கும்" இவர்களின் "விதிவிலக்கான" இப்பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் நாரி சக்தி விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது. [2] [1] 2017ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று புது தில்லியில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடமிருந்து இவர்களின் ஒரு பிரதிநிதி இந்த விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]