திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகப்பேறு மருத்துவமனை, திருப்பதி
Government Maternity Hospital, Tirupati
ஆந்திரப் பிரதேச அரசு
திருமலை திருப்பதி தேவஸ்தானம்[1]
அமைவிடம் திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அவசரப் பிரிவு ஆம்
படுக்கைகள் 152
நிறுவல் 1962
பட்டியல்கள்

திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனை (Government Maternity Hospital, Tirupati) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையாகும். 1962 ஆம் ஆண்டு இம்மருத்துவமனை நிறுவப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனையாக இது கருதப்படுகிறது.[2] 2013 ஆம் ஆண்டில் இம்மருத்துவமனை 152 படுக்கைகளைக் கொண்டிருந்தது. இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 பிரசவங்கள் பார்க்கப்பட்டன. முக்கியமாக ராயலசீமாவின் நான்கு மாவட்டங்களுக்கும் (சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தப்பூர்), ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களுக்கும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும் திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனை பயன்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Major hospitals in Tirupati to work closely". The Hindu. 3 February 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Major-hospitals-in-Tirupati-to-work-closely/article15977131.ece. பார்த்த நாள்: 18 July 2017. 
  2. "Maternity hospital awaits better 'treatment'". பார்க்கப்பட்ட நாள் 18 July 2017.