திருத்தந்தைப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தைப்பண்

இசையமைப்பு
இப்பாடலின் இசையமைப்பு

 வத்திக்கான் நகர் தேசிய கீதம்
எனவும் அறியப்படுகிறதுMarche Pontificale
இசைCharles Gounod, 1869
சேர்க்கப்பட்டது1949
இசை மாதிரி
Inno e Marcia Pontificale (Instrumental)

திருத்தந்தைப்பண் அல்லது பாப்பரசர் பண் என்பது திருத்தந்தையோ அல்லது திருப்பீடத்தூதுவர், கர்தினால்கள் போன்ற திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ பதில் ஆள் பங்கேற்கும் விழா அல்லது கூட்டங்களில் திருத்தந்தையை போற்றிப்பாடப்படும் பண் ஆகும். வத்திகானின் அதிகாரப்பூர்வ ஏடுகளின் இது நாட்டுப்பண் அல்ல என வெளிப்படையாகக் குறிக்கப்பட்டாலும், வத்திக்கான் நகரின் தேசியக் கொடி ஏற்றப்படும் போது இப்பாடல் பாடப்படுவது வழக்கம். பிற நாடுகளும் இப்பாடலை வத்திக்கானின் நாட்டுப்பண் போன்று கருதி, நாட்டுப்பண் பாடப்படவேண்டிய இடங்களில் இதனைப்பயன்படுத்துகின்றன.[1]

தமிழ் வழக்கு[தொகு]

தமிழ் கத்தோலிக்கர்களிடையே இப்பண் பின்வருமாறு பாடப்படுகின்றது. ஆயினும் இது மூல பாடலில் தழுவல் ஆகும். அதன் மொழிபெயர்ப்பு அல்ல.

ரோமை ராஜ பூபனே நமோ நமோ
திருச்சபையின் தலைவராக செனித்த மாதவா
உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம் (2)

உலக பாசம் ஒழிந்த சற்பிறசாதனே (2)
இறைவன் அருளால் உலகை ஆண்ட மாதவா (2)

உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம் (2)

தமிழ் மொழிப்பெயர்ப்பு[தொகு]

மூல பண்ணின் மொழிபெயர்ப்பு பின் வருமாறு:

வாழ்க உரோமை , புனிதர்களின் நித்திய தாயகம்;
ஓ நித்திய உரோமை, புகழின் நித்திய உறைவிடம் :
உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சியும் புகழ்ச்சியும்,
கிறிஸ்துவை நேசிப்போருக் கமைதியும் உரித்தாகுவதாகவே !

அதிஉன்னத ஆயரே,உம்மில் யாம் சரணடை கின்றோம் ,
உம்மிலே, மெய்மீட்பரை யாம் உணர்கின்றோம்!!
தூய மெய் மார்க்கத்தின் மெய் வாரிசு நீரே என்றும் ;
விசுவாசிகளின் ஊட்டமும், ஆறுதலும் நீரே!!

பகையும், தீவினையும் மறைந்து ஒழிந்து போம் !
அன்பும் கருணையும் என்றென்றும் ஆட்சி ஆளும்!

வாழ்க, வாழ்க உரோமை , நினைவுகளின் நித்திய தாயகம்;
உந்தன் மகிமை பாக்கள் எங்கெங்கும் ஒலிக்கின்றன!!
அப்போஸ்தலர்களின் உரோமை, மீட்பின் வழிகாட்டியாவாய் நீ
உரோமை, மனிதத்தின் ஒளியாவாய் , உலகின் நம்பிக்கை நீ !!

வாழ்க, வாழ்க உரோமை, உன் மாட்சி என்றும் நிலைக்கும்
வெறுப்பும் பகைமையும் உன் அழகில் அழிவுறும்!!
அப்போஸ்தலர்களின் உரோமை, மீட்பின் அடித்தளம் நீ
உரோமை, மனிதத்தின் ஒளியாவாய் , உலகின் எதிர்காலம் நீ !

மேற்கோள்கள்[தொகு]

  1. Pontifical Anthem and its History பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம். From the official site of Vatican City State. Accessed on 2009-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தைப்பண்&oldid=3714603" இலிருந்து மீள்விக்கப்பட்டது