திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில்[1] வள்ளிகோடு[2][3] கிராமத்தில் அமைந்துள்ள,விஷ்ணுவை மூலவராகக் கொண்ட ஒரு இந்துக் கோயிலாகும்.[4]

சிறப்பு[தொகு]

இக்கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் நிர்வகிக்கப்படுகிறது. உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குப் பிறகு இரண்டாவது புகழ்பெற்ற கோயிலாகக் கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள பிற கோயில்களில் காணப்படுகின்ற எளிமையான, நேர்த்தியான கட்டிடக்கலையின் அடிப்படையில், இக்கோயிலின் வளாகம் மிகவும் அமைதியான, ஆன்மீக கண்ணோட்டத்தில் உள்ளது. கோயிலை ஒட்டி கோயில் குளம் உள்ளது. அதில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

இங்கு நடைபெறுகின்ற 10 நாள் திருவிழாவில் ரூபமணி சுயம்பரம் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thrikkovil Padmanabhaswamy Temple, Kerala - Info, Timings, Photos, History" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  2. "Thrikkovil Sree Padmanabha Swami Kshetram, Pathanamthitta, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  3. "Thrikkovil Sree Padmanabha Swami Kshetram" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  4. "Thrikkovil Sri Padmanabha Swami Temple - Hindu temple - Pathanamthitta - Kerala". பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.

வெளி இணைப்புகள்[தொகு]